;
Athirady Tamil News

‘எழுக தமிழ்’ தோற்­க­லாமா?

0

எழுக தமிழ் என்ற பெயரில், நடக்­கப்­போகும் நிகழ்வில்,

அர­சியல், கட்சி வேறு­பா­டு­களை மறந்து அனை­வரும் பங்­கேற்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பேர­வையினரும் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் பொதுச்­செ­யலர் விக்­னேஸ்­வ­ரனும் அழைப்பு விடுத்­துள்ளனர்.

ஆனால், இந்த நிகழ்­வுக்கு தமிழ் மக்கள் பேர­வையில் அங்கம் வகிக்கும் தரப்­பு­களின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குக் கூட முடி­யாத துர்ப்­பாக்­கிய நிலை காணப்­ப­டு­கி­றது

போருக்குப் பிந்­திய 10 ஆண்­டு­களில் தமிழ் மக்­களின் அர­சியல் முற்­றி­லு­மா­கவே மாற்­ற­ம­டைந்து கொண்­டி­ருக்­கி­றது.

இலங்கை சுதந்­திரம் பெற்ற பின்னர், தமிழ்க் காங்­கிரஸ், தமி­ழ­ரசுக் கட்சி, தமிழர் விடு­தலைக் கூட்­டணி என்று தமிழ் மக்­களின் நம்­பிக்­கை­களைப் பெற்ற கட்­சிகள் மாறி மாறியே வந்­தி­ருக்­கின்­றன.

அதுவே விடு­தலைப் போராட்ட இயக்­கங்கள் முளை­விட்ட பின்னர் விடு­தலைப் புலி­களே தமிழ் மக்­களின் நம்­பிக்­கையைப் பெற்­ற­வர்­க­ளாக அவர்­களின் சார்பில் பேசு­ப­வர்­க­ளாக, அவர்­களின் பிர­தி­நி­தி­க­ளாக, அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்­து­ப­வர்­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டனர்.

2009இல் முள்­ளி­வாய்க்­காலில் விடு­தலைப் புலிகள் இயக்கம் தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர், அவர்­களின் உந்­து­த­லுடன் உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே, தமிழ் மக்­களின் சார்பில் பேசும் சக்­தி­யாக அவர்­களின் அபி­லா­ஷை­களை வெளிப்­ப­டுத்தும் சக்­தி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது. அங்­கீ­காரம் பெற்­றது.

அதற்குப் பின்னர் இப்­போது தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்கள் கூட்­டணி என்று பிள­வு­பட்டுப் போயி­ருக்­கி­றது தமிழர் அர­சியல்.

விடு­தலைப் புலி­களின் காலத்­திலும் சரி, புலி­க­ளுக்குப் பிந்­திய 5 ஆண்­டு­க­ளிலும் சரி, கொழும்பின் கடு­மை­யான அழுத்­தங்கள், நெருக்­க­டி­க­ளையும், தமிழ் மக்­களும், தமிழ்க் கட்­சி­களும் எதிர்­கொள்ள வேண்­டிய நிலையில் இருந்­தனர்.

அவ்­வா­றான சூழ்­நி­லையில், பொது­வான பிரச்­சி­னைக்­காக கருத்து வேறு­பா­டு­களை மறந்து தமிழ்க் கட்­சிகள் ஒன்­றி­ணைந்து செயற்­படும், போராடும் நிலை ஒன்று காணப்­பட்­டது.

அழுத்­தங்­களும் நெருக்­க­டி­களும் எப்­போ­துமே ஒற்­று­மையை வலி­மைப்­ப­டுத்தும் என்­ப­தற்கு அது ஒரு உதா­ரணம்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்து நெருக்­க­டிகள், தமிழ்க் கட்­சி­களை உள்­மு­ரண்­பா­டு­களை மறந்து செயற்­ப­டு­கின்ற- தமக்குள் குறைந்­த­பட்ச விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு இட­ம­ளிக்க அனு­ம­தித்­தது.

ஆனால், 2015க்குப் பின்னர், நிலை­மைகள் தலை­கீ­ழாக மாறின. ஜன­நா­யக அர­சியல் வெளி ஒன்று திறந்து விடப்­பட்­டது.

அதனைப் பயன்­ப­டுத்தி தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­லைப்­ப­டுத்தும் கட்­சிகள் பல உரு­வா­கி­யி­ருக்­கின்­றனவே தவிர, தமிழ்த் தேசி­யத்தை முன்­னி­றுத்­திய ஒற்­றுமை முற்­றா­கவே சிதைந்து சின்­னா­பின்­ன­மாகி விட்­டது.

தமிழ் மக்கள் பேரவை எதிர்­வரும், 17ஆம் திகதி, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளையும், அபி­லா­ஷை­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்­தி­ருக்­கி­றது.

எழுக தமிழ் என்ற பெயரில், நடக்­கப்­போகும் இந்த நிகழ்வில், அர­சியல், கட்சி வேறு­பா­டு­களை மறந்து அனை­வரும் பங்­கேற்க வேண்டும் என்று தமிழ் மக்கள் பேர­வையும் அழைக்­கி­றது. தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் பொதுச்­செ­யலர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் அழைப்பு விடுத்­தி­ருக்­கிறார்.

ஆனால், இந்த நிகழ்­வுக்கு தமிழ் மக்கள் பேர­வையில் அங்கம் வகிக்கும் தரப்­பு­களின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்குக் கூட முடி­யாத, துர்ப்­பாக்­கிய நிலை ஒன்று காணப்­ப­டு­கி­றது.

இதற்கு முன்னர் மட்­டக்­க­ளப்­பிலும், யாழ்ப்­பா­ணத்­திலும் இரண்டு எழுக தமிழ் நிகழ்­வுகள் நடத்­தப்­பட்­டன. அப்­போது, அதற்­காக உழைத்த இரண்டு கட்­சி­க­ளான புளொட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் இப்­போ­தைய நிகழ்­வுடன் ஒட்டிக் கொள்ளத் தயா­ராக இல்லை.

புளொட், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்­கி­றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, தனி­யாக செயற்­ப­டு­கி­றது.

தமிழ் மக்கள் பேர­வையின் ஆரம்ப கால உறுப்­பி­னர்­க­ளாக இருந்த இந்தக் கட்­சி­களால், இப்­போது ஏன் இந்த நிகழ்­வுக்குள் வர முடி­ய­வில்லை? என்­பதை புரிந்து கொண்­டா­லேயே, ஏனைய தரப்­பு­களை இதில் இணைத்துக் கொள்­வதில் உள்ள சிக்­கலைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் அமைப்பு என்ற அடை­யா­ளத்தை இழந்து விட்­டது முக்­கி­ய­மான குறை­பாடு. அது தனக்­கென ஒரு அர­சியல் சார்­பையும், வியூ­கத்­தையும் வகுத்துக் கொண்டு, செயற்­பட முனைந்­ததே இன்­றுள்ள பிரச்­சி­னைக்கு முக்­கி­ய­மான காரணம்.

இப்­போது, தமிழ்க் கட்­சிகள் அனைத்­தையும் பொது­நோக்­கிற்­காக ஒன்று கூட்­டு­வதில் சிர­மங்­களை எதிர்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கும் சரி, அதற்­கான ஒரு அமைப்பைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் சரி, முக்­கி­ய­மான தடைக்­கல்­லாக இருப்­பது, தமிழ் மக்கள் பேர­வையின் தோல்வி தான்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வழிப்­ப­டுத்­து­வ­தற்­காக என்ற போர்­வையில் தொடங்­கப்­பட்ட அந்த அமைப்பு, இன்று ஒரு அர­சியல் சார்பு நிலை அமைப்­பாக மாறி­யி­ருக்­கி­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இதை­விட்டு அச்சம் கொள்­கி­றதா என்­பது ஒரு புறத்தில் இருக்க, இந்த அர­சியல் சார்பு நிலை­யை­யிட்டு, பேர­வைக்குள் அங்கம் வகித்த கட்­சி­களே பயந்து விலக முற்­ப­டு­கின்­றன.

குறிப்­பாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, இந்த நிகழ்வு, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் அர­சியல் நல­னுக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் என்ற அச்­சத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. புளொட்­டுக்கும் அதே நிலைப்­பாடு இருக்­கி­றது. தேர்­தல்கள் நடக்கப் போகின்ற காலத்தில், இத்­த­கைய நிகழ்வின் ஊடாக தமது அர­சியல் பலத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு தமிழ் மக்கள் கூட்­டணி முற்­படும் என்ற கருத்து வலு­வாக இருக்­கி­றது.

மூன்று ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், ‘எழுக தமிழ்’ தூசி தட்­டப்­பட்­டுள்­ளதில் அர­சியல் இல்­லாமல் இருக்கும் என சொல்ல முடி­யாது.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில், தமிழ் மக்கள் கூட்­ட­ணிக்கு அங்­கீ­கா­ரத்தைக் கொடுத்து, அந்தக் கட்சி அர­சியல் நலன்­களை அறு­வடை செய்­வ­தற்கு ஏனைய கட்­சிகள் உதவ வேண்டும் என்று எதிர்­பார்ப்­பது முட்­டாள்­தனம்.

தமிழ் மக்கள் பேரவை இந்த நிகழ்வை நடத்­து­வ­தற்கு முடிவு செய்­வ­தற்கு முன்னர், அர­சியல் கட்­சிகள் அனைத்­தையும் அழைத்து பேசி­யி­ருக்க வேண்டும்.

எல்லாத் தரப்­பு­களின் கருத்­துக்­க­ளையும் கேட்டு, அர­சியல் சாய­மின்றி தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை எவ்­வாறு வெளிப்­ப­டுத்­தலாம் என்­ப­தற்­கான ஒரு வரைவை தயா­ரித்­தி­ருக்க வேண்டும்.

அவ்­வாறு எது­வு­மில்­லாமல், தமிழ் மக்கள் கூட்­ட­ணியும், தமிழ் மக்கள் பேர­வையும் இணைந்து இந்த நிகழ்­வுக்­கான ஒழுங்­கு­களை செய்து விட்டு, முடி­வு­க­ளையும் எடுத்து விட்டு, அர­சியல் சார்­பின்றி அனை­வ­ரையும் பங்­கேற்க அழைக்கும் போது, எல்­லோரும் அதனை ஏற்­றுக்­கொள்ள முன்­வ­ரு­வார்­களா என்­பது சந்­தேகம் தான்.

ஏனென்றால், எல்லாக் கட்­சி­க­ளையும் சேர்ந்­த­வர்கள் எழுக தமிழ் நிகழ்வில் ஒன்று கூடிய பின்னர், அதனை தமிழ் மக்கள் கூட்­ட­ணியோ ஈ.பி.ஆர்.எல்.எவ்வோ தமது தேர்தல் நலன்­க­ளுக்கு பயன்­ப­டுத்திக் கொள்­ளாது என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம் இருக்­கி­றது.

அந்தக் கூட்­டத்தை வைத்து, ஏனைய கட்­சி­க­ளுக்கு அவர்கள் சவால் விட மாட்­டார்கள் என்­ப­தற்கு யார் உத்­த­ர­வாதம்? கடந்த காலங்­களில் இவ்­வா­றான நிகழ்­வுகள் நடந்­தி­ருக்­கின்­றன. தாமே ஒழுங்கு செய்தோம் என்று உரிமை கோரல்­களும் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன.

அவ்­வா­றான ஒரு நிலைக்கு இடம் கொடுக்­காத வகையில், எழுக தமிழ் நிகழ்­வுக்­கான திட்­ட­மி­டல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்க வேண்டும். அதில் ஏற்­பாட்­டா­ளர்கள் கவனம் செலுத்­தி­ய­தாக தெரி­ய­வில்லை.

அதே­வேளை, எழுக தமிழ் நிகழ்வில் தமிழ் மக்கள் திர­ளாக பங்­கேற்க வேண்டும், மக்­களின் அபி­லா­ஷை­க­ளையும் கோரிக்­கை­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்டும் என்­பது நியா­ய­மான அழைப்பு.

இவ்­வா­றான அழைப்பு ஒன்­றுக்கு, மக்கள் அதி­க­ளவில் செவி­சாய்க்­காமல் போனால் அதன் பாதிப்பு, எழுக தமிழ் ஏற்­பாட்­டா­ளர்­க­ளுக்கோ, தமிழ் மக்கள் பேர­வைக்கோ அல்­லது சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கோ அல்ல. ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் தான்.

அதனை வைத்து வரும் தேர்­தல்­களில் தமிழ் மக்கள் திசை மாறி விட்­டார்கள் அவர்கள், அபி­வி­ருத்­திக்கே கனவு காண்­கி­றார்கள் என்று முடிச்சுப் போட்டு விடு­வார்கள்.

இவ்­வா­றா­ன­தொரு பிரச்­சி­னையை உணர்ந்து ஏற்­பாட்­டா­ளர்கள் இதனை பல­மான ஒரு திரட்­சி­யாக வெளிப்­ப­டுத்த முனைந்­தி­ருக்க வேண்டும்.

தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் பிர­சா­ரங்­களும், முயற்­சி­களும் அவ்­வா­றா­ன­தொரு பெருந்­தி­ரட்­சியை ஏற்­ப­டுத்தப் போது­மா­னதா என்ற நியா­ய­மான சந்­தே­கங்கள் இருக்­கின்­றன.

நிகழ்­வுக்கு இன்னும் ஒரு­வாரம் தான் இருக்­கி­றது. அதற்­குள்­ளாக, அதனை வெற்­றி­க­ர­மாக தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள், கோரிக்­கை­களை வெளிப்­ப­டுத்தக் கூடி­ய­தாக ஒழுங்­க­மைக்க வேண்­டி­யது ஏற்­பாட்­டா­ளர்­களின் பொறுப்பு.

அதே­வேளை அர­சி­யல்­கட்­சிகள் இவ்­வா­றா­ன­தொரு சூழலில் தனிப்­பட்ட அர­சியல் நலன்­களை ஒதுக்கி வைப்­பதே சிறந்­தது. தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் ஒற்­று­மை­யாக இல்லை என்றோ, பல­வீ­ன­மாக இருக்­கி­றார்கள் என்றோ தெற்­கிற்கு வெளிப்­ப­டுத்­தப்­படும் செய்தி ஆபத்­தா­னது.

ஏற்­க­னவே தமி­ழர்­களின் பல­மான கோரிக்­கைகள், இழுத்­த­டித்து இழுத்­த­டித்து நீர்த்துப் போகச் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், இந்தப் பல­வீ­னத்தை அவர்கள் தமக்கு சாத­க­மாக மாற்றிக் கொள்­ளவே முனை­வார்கள்.

அர­சியல் ரீதி­யாக தமிழ்த் தேசியக் கட்­சிகள் பிள­வு­பட்டு பிரிந்து கிடக்­கின்ற இந்­த­நிலை, வடக்கில் காலூன்ற முனையும் சிங்­கள பௌத்த பெருந்தேசியவாத கட்சிகளுக்கே சாதகமாக அமையும்.

இந்த ஆபத்தை உணர்ந்து கொண்டும், தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைய விடாமல் தடுக்கிறது தற்போதைய சூழல்.

பிளவுபட்டுப் போயுள்ள தமிழ்க் கட்சிகள் இப்போது பொது நோக்கிற்காக கூட, ஒன்று சேர மறுக்கின்ற நிலையானது, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலும் பலவீனமாக ஒலிக்கவே காரணமாக அமையப் போகிறது.

இந்தப் பலவீன நிலைக்கு தமிழ் மக்கள் பேரவை ஒரு முக்கியமான காரணம். அந்தக் காரணத்தை திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டிக் கொண்டு இருப்பது பயனற்றது.

ஏனென்றால் பிளவு அரசியலுக்கு அப்பால் தமிழர்களுக்கான ஒரு பொது அரசியல் தேவை இருக்கிறது. அது தான் இப்போது முக்கியமானது.

அவ்வாறான ஒரு பொது அரசியல் தேவையை நிறைவு செய்வதற்காக, தடையாக இருப்பவர்களும் விலகி இடம்கொடுக்க வேண்டும். ஒதுங்கி நிற்க முனைபவர்களும், கொஞ்சம் முன்னே வரத்தான் வேண்டும்.

ஏனென்றால், இது தமிழ்த் தேசிய அரசியலின் தேவை.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 5 =

*