;
Athirady Tamil News

மாணவர்கள் தண்டிக்கப்படுவது குறித்து முறைப்பாடுகள் கிடைப்பதில்லை!!

0

அட்டன் கல்வி வலயத்தை அடிப்படையாகக் கொண்டு தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெறப்பட்ட விடயங்கள்

ஐக்­கிய நாடுகள் சபையின் சிறுவர் உரி­மை­க­ளுக்­கான மாநாடு 1990 ஆம் ஆண்டு ஜன­வரி 26 ஆம் திகதி இடம்­பெற்­ற­போது சிறு­வர்­களின் உரி­மை­களை வலி­யு­றுத்தி 59 நாடுகள் முதல் நாளில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­தன. இலங்கை 1991 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதி இதில் கையெ­ழுத்­திட்­டது. சிறு­வர்­களை கொடூ­ர­மாக தாக்­குதல், சித்­தி­ர­வதை செய்தல் போன்ற செயற்­பா­டு­களை இது தடை செய்­தது. பிர­தா­ன­மாக பாட­சாலை மாண­வர்­களே இதில் அவ­தா­னிக்­கப்­பட்­டனர்.

ஆசி­ரி­யர்கள் மாண­வர்­களை கொடூ­ர­மாக தண்­ட­னைக்­குட்­ப­டுத்­து­வது குறித்து எழுந்த முறைப்­பா­டு­க­ளை­ய­டுத்து அரச, தனியார் , சர்­வ­தேச பாட­சா­லை­களில் மாண­வர்­களை உடல் ரீதி­யான (Corporal Punishment) தண்­டனை வழங்­கு­வதை தடை செய்யும் முக­மாக கல்வி அமைச்­சா­னது 2001 ஆம் ஆண்டு சுற்று நிரு­ப­மொன்றை சகல பாட­சா­லை­க­ளுக்கும் அனுப்பி வைத்­தது.

எனினும் மாண­வர்­களை உள­ரீ­தி­யாக பாதிப்­புக்­குட்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் அதி­க­ரிக்­கவே, கல்வி அமைச்சு மீண்டும் 2005 ஆம் ஆண்டு மாண­வர்கள் உடல், உள ரீதி­யாக தண்­ட­னைக்­குள்­ளா­வதை தடை செய்யும் முக­மாக 2005/17 ஆம் இலக்க சுற்­ற­ரிக்­கையை அனுப்பி அதை உறுதி செய்யும் படி கல்வி அதி­கா­ரிகள், அதி­பர்கள், ஆசி­ரி­யர்­களை வலி­யு­றுத்­தி­யது.

எனினும் மாண­வர்­களை கட்­டுப்­ப­டுத்தும் வழி­தெ­ரி­யாது அதிபர், ஆசி­ரி­யர்கள் தமது பிரச்­சி­னை­களை முன்­வைத்து வரவே 2016 ஆம் ஆண்டு ஏப்­ரலில் 12/2016 ஆம் இலக்க சுற்­ற­றிக்­கையில் பாட­சா­லையில் ஒழுக்­காற்று குழுக்­களை அமைத்து மாண­வர்­களின் ஒழுக்­கத்தை பேணும் வகையில் திட்­டங்­களை வகுத்­தது. ஆனாலும் மாண­வர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வது குறைந்­த­பா­டில்லை. தற்­போது கல்வி அமைச்­சா­னது 2020 ஆம் ஆண்டு சகல பாட­சா­லை­க­ளிலும் இவ்­வ­கை­யான தண்­டனை வழங்­கலை முற்­றாக இல்­லா­தொ­ழிக்கும் நட­வ­டிக்­கை­களில் இறங்­கி­யுள்­ளது. இந்­நி­லையில் சில பாட­சாலை ஆசி­ரி­யர்கள் இது ஒரு தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்­பதை அறி­யாது மாண­வர்­களை தண்­டித்து வரு­கின்­றனர். மாண­வர்கள் மன­ரீ­தி­யாக பாதிக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாட­சாலை இடை­ வி­ல­க­லுக்கும் முகங்­கொ­டுக்கும் ஒரு சூழ்­நிலை ஏற்­ப­டு­கின்­றது.

இச்­சுற்று நிருபம் தொடர்பில் பாட­சா­லை­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றதா ? முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­னவா ? இதற்கு வல­யக்­கல்வி திணைக்­களம் என்ன நட­வ­டிக்­கைகளை எடுத்­துள்­ளது போன்ற வினாக்­களை முன்­வைத்து அட்டன் வல­யக்­கல்வி காரி­யா­லயத்­திடம் தகவல் அறியும் சட்­டத்தின் அடிப்­ப­டையில் ஆராய்ந்தோம்.

சுற்­று­நி­ருபம் பற்றி தெரி­யா­தவர் அதி­ப­ராக இருக்க வாய்ப்­பில்லை

இதற்கு பதில் அளித்­துள்ள வல­யக்­கல்வி பணி­மனை பின்­வரும் தக­வல்­களை எமக்கு வழங்­கி­யுள்­ளது.

1. மாண­வர்­களை உடல் ரீதி­யாக தண்­டிப்­ப­தற்­கான தடை குறித்­தான சகல சுற்று நிரு­பங்­களும் கல்வி அமைச்­சினால் பாட­சா­லை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. சுற்று நிரு­பங்கள் பற்றி தெரி­யாத ஒருவர் அதி­ப­ராக இருக்க வாய்ப்பே இல்லை. பாட­சா­லை­களில் ஒழுக்­காற்று குழுக்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றின் மூலம் செய­ல­மர்­வு­களை நடத்தி அதி­பர்கள் கூட்­டத்தில் மேற்­படி விடயம் வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

2. 2018 ஆம் ஆண்­டி­லி­ருந்து இது வரை அட்டன் வல­யக்­கல்வி காரி­யா­ல­யத்­திற்கு எந்தவித முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. ஆனால் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டுகள் செய்­யப்­பட்டு சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இம்­மு­றைப்­பா­டுகள் குறித்து பொலிஸார் எமக்கு அறி­விப்­ப­தில்லை. எனினும் மாதாந்தம் இடம்­பெறும் உயர் பொலிஸ் அதி­கா­ரியின் தலை­மை­யி­லான கூட்­டத்தில் பொது­வாக அறி­விக்­கப்­படும்.

3. எமக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கா­விடின் அது குறித்து எந்த நட­வ­டிக்­கை­களையும் எம்மால் எடுக்க முடி­யாது என்று தெரி­வித்­துள்ள வல­யக்­கல்வி காரி­யா­லயம் அண்­மையில் அட்டன் வலய பாட­சா­லையில் தரம் 4 இல் கற்கும் மாணவி ஒருவர் ஆசி­ரியை ஒரு­வரால் கடு­மை­யாக தாக்­கப்­பட்­டமை குறித்து எவ்­வித முறைப்­பா­டு­களும் கிடைக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்­ளது. மேலும் அது குறித்து அப்­பா­ட­சாலை அதி­ப­ரி­டமே கேட்டு தெரிந்து கொள்­ளும்­படி பதில் அளித்­துள்­ளது. இவ்­வாறு ஒரு சம்­பவம் நடந்­ததா இல்­லையா என்­பது பற்றி குறித்த கல்வி வலய அதி­கா­ரி­களே பாட­சாலை தரப்­பிடம் வின­வி­யி­ருக்க வேண்டும் என்­பது முக்­கிய விடயம்.

4. சில பாட­சாலை ஆசி­ரி­யர்கள் மாண­வர்­க­ளிடம் பிரம்­புகள் வாங்கி வரும்­படி உத்­த­ர­விட்­டுள்­ளமை குறித்து வல­யக்­கல்வி பணி­மனை அறி­யுமா என்ற கேள்­விக்கு இது­வரை அவ்­வா­றான எந்த முறைப்­பா­டு­களும் கிடைக்­க­வில்லை என பதில் அளித்­துள்­ளது.

இதேவேளை தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யா­னது 2017 ஆம் ஆண்டு மேற்­கொண்ட ஆய்வில் அதிக உடல் உள­ரீ­தி­யான தண்­ட­னைக்­குள்­ளாகும் சிறு­வர்கள் பாட­சாலை மாண­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர் எனத் தெரி­வித்­துள்­ளது. அவ்­வாண்டு ஜன­வரி முதல் மார்ச் வரை கொழும்பு, நுவ­ரெ­லியா, மொன­ரா­கலை, முல்­லைத்­தீவு, காலி, திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் அமைந்­துள்ள ஆரம்ப, இடை­நிலை, உயர்­தர, தனியார், சர்­வ­தேச பாட­சா­லைகள் மற்றும் பிரி­வெ­னாக்கள், விசேட தேவை­யு­டையோர் கற்கும் பள்­ளிகள் ஆகி­ய­வற்றின் 984 மாண­வர்­க­ளையும் 459 ஆசி­ரி­யர்­க­ளையும் ஆய்வு ரீதி­யான கேள்­வி­களை எழுப்பி பதில்­களைப் பெற்­றனர்.

இதன் போது கருத்துத் தெரி­வித்த மாண­வர்­களில் 80.4 வீத­மா­ன­வர்கள் (762 பேர்) தாம் ஒரு தட­வை­யா­வது கடந்த காலங்­களில் உடல் ரீதி­யான தண்­ட­னையை அனு­ப­வித்­துள்­ள­தாகத் தெரி­வித்­தனர்.

மறு­புறம் ஆசி­ரி­யர்­களைப் பொறுத்­த­வரை 69.1 வீத­மானோர் குறைந்­தது ஒரு தட­வை­யா­வது ஒரு மாண­வ­னையோ மாண­வி­யையோ உடல் ரீதி­யாக தண்­ட­னைக்­குட்­ப­டுத்­தி­ய­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இதில் 13.1 வீத­மானோர் மாண­வர்­க­ளுக்கு ஏதோ ஒரு வகை உடல்­ரீ­தி­யான தண்­ட­னையை வழங்­கு­வ­தா­கவும் அதில் 65.8 வீத­மானோர் உள­வியல் ரீதி­யான பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும் ஏற்­றுக்­கொண்­டனர்.

2018 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் யுனிசெப் அமைப்­பா­னது தனது உல­க­ளா­விய அறிக்­கையில் பாட­சா­லை­களில் உடல்­ரீ­தி­யான தண்­ட­னையை முழு­மை­யாக தடை செய்­யாத நாடு­களில் இலங்­கை­யையும் உள்­ள­டக்­கி­யி­ருந்­தது. உல­கெங்­கினும் இவ்­வாறு பாதிக்­கப்­படும் சிறு­வர்­களின் எண்­ணிக்கை 720 மில்­லியன் என அது குறிப்­பி­டு­கி­றது.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு மன­அ­ழுத்தம் தொடர்­பான முகா­மைத்­துவ பயிற்­சிகள், சிறுவர் உள­வியல் மற்றும் அது சார்ந்த நுட்­பங்­களை அதி­க­ரிக்கும் படி யுனிசெப் பரிந்­துரை செய்­கின்­றது. மேலும் பாட­சா­லை­களில் மாண­வர்­களை எதிர்­ம­றை­யாக தண்­ட­னைக்­குட்­ப­டுத்தும் அணு­கு­மு­றைகள் அகற்­றப்­படல் வேண்டும் என்றும் கூறு­கி­றது. இந்த ஆய்­வு­களை வைத்து பார்க்கும் போது பாட­சா­லை­களில் இன்னும் இவ்வாறான தண்டனைகளை வழங்கும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள் என்ற முடிவுக்கு வரலாம். கூடுதலாக பின்தங்கிய கஷ்டபிரதேச பாடசாலைகளில் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவது வெளிஉலகத்துக்குத் தெரியாது. தண்டனைக்குப் பயந்தே பல மாணவர்கள் இடைவிலகலுக்குட்பட்டிருக்கின்றனர். ஆசிரியர் –பெற்றோர்களுக்கிடையில் முரண்கள் ஏற்பட்டிருக்கின்றன.

ஆகவே 2016 ஆம் ஆண்டின் 12/2016 கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் படி பாடசாலைகளில் ஒழுக்காற்று குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை வலயக்கல்வி காரியாலயங்கள் உறுதிப்படுத்தி அவற்றை கண்காணித்து மாதத்திற்கொருமுறை அவர்களிடம் அறிக்கையைப்பெற்றுக்கொண்டாலே இதை கட்டுப்படுத்தலாம் அதற்கு வலயக்கல்வி காரியாலங்கள் முன்வருமா?
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 10 =

*