;
Athirady Tamil News

பொலிஸ் அதிகாரிக்கு எமனான பவுஸர்!!

0

மாவனெல்லை, உத்துங்கந்த பிரதேசத்தில் பொலிஸ் ஜீப் ரக வாகனத்தின் மீது பவுஸர் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் உத்துவங்கந்த பிரதேசத்தில் வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிஸ் ஜீப் ரக வாகனம் மீது பவுஸர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 12.45 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஜீப் ரக வாகனத்தில் இருந்த மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்த நிலையில், மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 4 =

*