;
Athirady Tamil News

டெல்லி – லக்னோ தேஜாஸ் ரெயில் பயணிகளுக்கு 25 லட்சம் இலவச இன்சூரன்ஸ்..!!

0

இந்திய ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, டெல்லி-லக்னோ இடையே இயக்கப்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலை ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்க முடிவாகி உள்ளது.

இந்நிலையில், டெல்லி-லக்னோ இடையே அடுத்த மாதம் இயக்கப்பட உள்ள தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இலவச இன்சூரன்ஸ் வழங்க முடிவுசெய்யப்பட்டு உள்ளது.

இந்த ரெயில் பயணிகளுக்கு லக்னோ சந்திப்பு, புதுடெல்லி சந்திப்பில் ஓய்வறை உள்ளிட்ட வசதிகளும், சிறப்பு அறை வசதிகளும், கோரிக்கையின் பேரில் கூட்டங்கள் நடத்துவதற்கான அறை வசதிகளும் செய்து தரப்படும்.

ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணம் வசூல் செய்யப்படும். தட்கல் ஒதுக்கீடு முறை கிடையாது. எக்சிகியூட்டிவ் வகுப்பு மற்றும் ஏ.சி. சேர் கார் போன்றவற்றில் வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு தலா 5 இருக்கைகள் ஒதுக்கப்படும்.

இதேபோல், பயணிகள் தங்களது உடைமைகளை வீடுகளில் இருந்து ரெயில் இருக்கைகளுக்கு கொண்டு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தின் அடிப்படையில் சேவை வழங்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*