;
Athirady Tamil News

முல்லை. மாவட்டத்தில் காணி விடுவிப்பு கலந்துரையாடல்!! (படங்கள்)

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.. வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி மற்றும் வன்னி படைகளின் கட்டளை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், பொலிசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த விசேட கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் காலை 10 மணியளவில் ஆரம்பமாகியது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + one =

*