;
Athirady Tamil News

வவுனியாவில் பாடசாலைக்கு தண்ணீர் தாங்கி வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

வவுனியா கரும்பனிச்சாங்குளம் அ.த.க. பாடசாலைக்கு குடிதண்ணீர் தாங்கி ஒன்று வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கத்தினரால் இன்று (12) வழங்கி வைக்கப்பட்டது.

தண்ணீர் தாங்கி வழங்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எஸ்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.
வவுனியாவில் ஏற்பட்ட கடும் வரட்சியின் காரணமாக குறித்த பாடசாலையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் கிணறு வற்றிவிட்ட நிலையில் பாடசாலையின் அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த தண்ணீர் தாங்கி வவுனியா வர்த்தக நலன்புரிச் சங்கத்தினரால் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாடசாலை கிணற்றையும் பார்வையிட்டிருந்தனர்.

குறித்த பாடசாலைக்கு பிரதேச சபையினர் இலவசமாக தண்ணீர் வினியோகம் செய்வதாக தெரிவித்துள்ள நிலையிலேயே அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக தண்ணீர் தாங்கி வழங்கி வைக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 5 =

*