;
Athirady Tamil News

மன்னார் சர்வோதய இளைஞர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது.!! (படங்கள்)

0

மன்னார் மாவட்ட சர்வோதய இளைஞர் மன்றம் இன்று 12.09.2019 ஆரம்பிக்கப்பட்டது. சர்வோதய தலைவர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரட்ன அவர்களின் “அடுத்த தலைமுறை” என்னும் ‘தேசோதய’ நடவடிக்கையினை வலுப்படுத்தும் விதமாக மன்னார் மாவட்ட சர்வோதய இணைப்பாளர் உ.துஷ்யந்தன் அவர்களினால் இன்று மாலை மன்னார் மாவட்ட சர்வோதய இளைஞர் அணி [Sarvodaya youth forum – Mannar] உருவாக்கப்பட்டது.

முக்கிய பிரச்சனைகளை, செயற்பாடுகளை தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களினூடாக சமூதாயத்தினை வலுப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ள இவ் இளைஞர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் அணியின் கௌரவ தலைவராக மேசாக் மனோவா அவர்களும் கௌரவ செயலாளராக எம. எப். ஸ்ரத் அவர்களும், கௌரவ பொருளாளராக தேனுசன் அவர்களும், மற்றும் கௌரவ உப தலைவராக திவாகரன் அவர்களும், உப செயலாளராக கான் ஆகியோர் காணப்படுகின்றனர்.
–சர்வோதய ஊடகப்பிரிவு–

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 4 =

*