;
Athirady Tamil News

சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் !! (படங்கள்)

0

பிரித்தானிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நேற்று முன் தினம் புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய தூதுவராலயமும், சுற்றுலா பொலிஸாரும் இணைந்து நாடு பூராகவும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சுற்றுலா பயணிகளுக்கான அவதான பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த அவதான பலகையில் சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் தொடர்பில் உடனடியாக சுற்றுலா பொலிஸாருக்கு அறிவிக்க கூடிய தொலைபேசி இலக்கம் குறிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரித்தானிய தூதுவர் ஆலயத்தின் அதிகாரிகள், சுற்றுலா பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண புகையிரத பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு பகுதிகளில் அண்மைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து பணப்பொதிகள் மற்றும் அவர்களுடைய ஆவணங்கள் களவாடும் சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த செயற்பாடானதுஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − one =

*