;
Athirady Tamil News

கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் வெற்றி!!

0

ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் விஷேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.

நேற்று (14) இரவு நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*