;
Athirady Tamil News

உயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர மாண­வர்­க­ளுக்கு புதிய விசா திட்டம்!!

0

தமது உயர்­கல்­வியை பிரிட்­டனில் தொடர விரும்பும் இலங்கை மாண­வர்­க­ளுக்கு உற்­சா­க­ம­ளிக்கும் வகையில் உயர்­கல்வி விசா வழங்கல் திட்­ட­மொன்றை புதி­தாக ஆரம்­பித்­துள்­ள­தாக கொழும்­பி­லுள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் தெரி­வித்­தி­ருக்­கி­றது.

இந்த புதிய விசா திட்­டத்தின் மூல­மாக மாண­வர்கள் பிரிட்­டனில் தங்­கி­யி­ருந்து தொழில் புரிந்­த­வாறே தமது உயர்­கல்­வியைத் தொட­ர­மு­டியும். அல்­லது கல்வி செயற்­பா­டு­களைப் பூர்த்தி செய்த பின்னர்

அடுத்த இரு­வ­ரு­டங்கள் தொழில்­பு­ரிய முடியும். இதன்­மூலம் திற­மை­யுள்ள மாண­வர்கள் தமது உயர்­கல்­வியை முழு­மை­யாக நிறை­வு­செய்ய பின்­னரும் இரு­வ­ரு­டங்கள் பிரிட்­டனில் தங்­கி­யி­ருந்து தொழில்­பு­ரி­யக்­கூ­டிய வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது.

இந்த விசா­விற்கு விண்­ணப்­பிக்கக் கூடிய வாய்ப்பு இள­மா­ணிப்­பட்­டப்­ப­டிப்பைப் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் பூர்த்தி செய்த அனைத்து மாண­வர்­க­ளுக்கும் வழங்­கப்­படும். 2020 – 2021 என்ற புதிய கல்­வி­யாண்­டி­லி­ருந்து இப்­பு­திய விசா வழங்கல் திட்­டமும் ஆரம்­பிக்­கப்­படும்.

சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து திறமை வாய்ந்த மாண­வர்­களை உயர்­கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக உள்­வாங்கிக் கொள்­வதும், அவர்­களின் ஊடாக பிரிட்­டனின் பொரு­ளா­தார மேம்­பாட்­டிற்­கான பங்­க­ளிப்பைப் பெற்­றுக்­கொள்­வதும் இத்­திட்­டத்தின் நோக்­க­மாக இருக்­கின்­றது. ‘வெளி­நாட்டில் தமது உயர்­கல்­வியைத் தொடரும் விருப்­பத்தைக் கொண்­டி­ருக்கும் இலங்கை மாண­வர்­க­ளுக்கு இது மிகச்­சி­றந்­த­தொரு வாய்ப்­பாகும். இது முதற்­தரக் கல்­வி­யையும், தொழில்­பு­ரியும் வாய்ப்­பையும், சிறந்த வாழ்க்கை அனுபவத்தையும் ஒரேநேரத்தில் பெற்றுக்கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது’ என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் கூறியிருக்கிறார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − nine =

*