;
Athirady Tamil News

பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி; விசா­ர­ணை!!

0

பயங்­க­ர­வாதி சஹ்­ரா­னுடன் ஆயுத பயிற்சி பெற்­ற­வர்கள், தடை செய்­யப்­பட்ட தேசிய தெளஹீத் ஜமாஅத், ஜமாத்தே, மில்­லத்தே இப்­ராஹீம் உள்­ளிட்ட மூன்று அமைப்­புக்­களில் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட்­ட­வர்கள் தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

சி.ஐ.டி., சி.ரி.ஐ.டி., எப்.சி.ஐ.டி. ஆகிய விஷேட விசா­ரணைப் பிரி­வு­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி கட்­டுப்­பாட்டில் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ஜய­சிங்­கவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் அடுத்த கட்­டத்தை நோக்கி நகர்த்­தப்­பட்­டுள்­ளன.

அதன்படி, உளவுத் துறையின் உத­வி­யுடன் அம்­பாறை பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழான சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்த ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 15 பேர் உட்­பட சி.ரி.ஐ.டி. பொறுப்பிலுள்ள சந்­தேக நபர்­களில் 30 பேரிடம் விஷே­ட­மாக நுவ­ரெ­லியா, அம்­பாந்­தோட்­டையில் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்­தேக நபர்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தாக அறிய முடி­கின்­றது.

21/4 உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டு­களின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் 177 பேர் தொடர்ந்து தடுப்புக் காவலில் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். இவர்­களில் 61 பேர் குற்றப் புல­னாய்வுப் பிரி­விலும், 58 பேர் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரி­விலும், 41 பேர் கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரி­விலும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இத­னை­விட, அம்­பாறை பொலிஸ் பிரிவில் 5 பேரும் கல்­கிசை பொலிஸ் பிரிவில் 4 பேரும், கொழும்பு தெற்கு பொலிஸ் பிரிவில் 4 பேரும், நுகே­கொடை பொலிஸ் பிரிவில் 3 பேரும், கண்டி பொலிஸ் பிரிவில் ஒரு­வரும் தொடர்ந்து தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.

முன்­ன­தாக தற்­கொலை குண்டுத் தாக்­குதல் நடத்­திய பயங்­க­ர­வாத குழு­வுக்கு குண்டு தயா­ரிப்பு , அது தொடர்­பி­லான தொழில்­நுட்ப உத­வி­களை செய்­த­தாக கூறப்­படும், தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி சஹ்­ரானின் சகா­வான 24 வயது இளைஞர் ஒரு­வரை கைது செய்து உள­வுத்­துறை முன்­னெ­டுத்த விசா­ர­ணைகள் மற்றும் அம்­பாறை, கல்­முனை, சாய்ந்­த­ம­ருது பிர­தே­சங்­களில் பாது­காப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளிடமிருந்து பெறப்­பட்ட தக­வ­லுக்­க­மைய நுவ­ரெ­லி­யாவில் ஆயுதப் பயிற்சி அளிக்­கப்­பட்ட வீட்டை கடந்த மே 6 ஆம் திகதி பாது­காப்பு தரப்­பினர் கண்­டு­பி­டித்­தனர். காத்­தான்­குடி பகு­தியைச் சேர்ந்த குறித்த இளைஞன் இது தொடர்­பி­லான அனைத்து தக­வல்­க­ளையும் தேசிய உள­வுத்­துறை விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பல நாட்கள் இந்த பாது­காப்பு

இல்­லத்தை கண்­ட­றிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்ட நிலை­யி­லேயே, கைது செய்­யப்­பட்ட 24 வய­தான சந்­தேக நப­ரையும் அழைத்து சென்று இந்த இரு மாடிகள் கொண்ட வீட்டை பொலி­ஸாரும் உள­வுத்­து­றையும் கண்­டு­பி­டித்­தி­ருந்­தனர்.

இதன்­போது குறித்த வீட்டில் சஹ்ரான் முன்­னெ­டுத்த உப­தேசம் மற்றும் பயிற்­சி­களில் தானும் பங்­கு­கொண்­ட­தா­கவும், அப்­போது சுமார் 35 பேர் அங்கு இருந்­த­தா­கவும் கைதான சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம் கூறி­யி­ருந்தார். அதில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் நடத்­தி­யோரும் உள்­ள­டங்­கு­வ­தாக அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தாக பாது­காப்பு உயர் மட்ட தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தின.

நுவ­ரெ­லியா பிளக் பூல் பகு­தியில் பாது­காப்புத் தரப்­பி­னரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட குறித்த பயங்­க­ர­வா­தி­களின் பாது­காப்பு இல்­லத்திலிருந்து மீட்­கப்­பட்ட மடிக் கணி­னியில் இருந்து ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு தொடர்பில் பல இர­க­சி­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் குறித்த காணியில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சந்தேகிக்கத்தக்க 60 பேரின் பெயர்ப் பட்டியலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவர்களில் பல பெயர்கள் புனைப் பெயர்களாக மட்டுமே உள்ள நிலையில் புனைப் பெயர்களில் உள்ள சந்தேக நபர்களை கைது செய்ய உளவுத்துறையின் உதவியுடன் விஷேட விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*