;
Athirady Tamil News

யாழில் விவசாயக் கண்காட்சி – 2019!! (படங்கள்)

0

யாழில் நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி விவசாயக் கண்காட்சி – 2019

யாழ்ப்பாணம்,பலாலி வீதி திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் 17.09.2019 ஆம் திகதி தொடக்கம் 20.09.2019 ஆம் திகதி வரையான 4 நாட்கள் ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி – 2019 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 17.09.2019 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதியாக கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வடமாகாண விவசாயத் திணைக்களம் கீழ் வரும் நிறுவனங்களுடன் இணைந்து இக் கண்காட்சியினை ஒழுங்கமைத்துள்ளது.
மத்திய விவசாயத் திணைக்களம்

பொதுமக்கள், விவசாயிகள், கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளம் விவசாயிகள் கழகங்களின் உறுப்பினர்கள், கிராமஅபிவிருத்தி சங்கங்களின்; உறுப்பினர்கள், மாதர் கிராமஅபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற அன்புடன் அழைக்கின்றார் யாழ்ப்பான பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி சிறீரங்கன்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + three =

*