;
Athirady Tamil News

பிரித்தானிய இளம்பெண்ணுக்கு ஈரானில் 10 ஆண்டு சிறைத்தண்டனை..!!

0

அவுஸ்திரேலியாவில் வேலை செய்து வந்த பிரித்தானிய இளம்பெண் ஈரானின் மோசமான சிறையில் 10 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளான ஜோலி கிங் மற்றும் அவரது காதலன் மார்க் ஃபிர்கின் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதியில்லாமல் ஈரானில் ட்ரான் பறக்கவிட்டதற்காக கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வுகளின் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த கைலி மூர்-கில்பர்ட், ஈரானில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

அரபு எழுச்சிகள் மற்றும் சர்வாதிகார அரசாங்கங்கள் குறித்த படைப்புகளை 2011ம் ஆண்டு அவர் வெளியிட்டார். இதன் காரணமாக 2018ம் ஆண்டில் கைது செய்யப்பட்டு தெஹ்ரானின் மோசமான எவின் சிறையில் அடைக்கப்பட்டிருந்துள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டிருந்தது சனிக்கிழமை வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. வெளியில் தெரிந்தால் விடுதலை செய்யப்படுவதற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுத்தும் என்கிற காரணத்தால் அப்படி வைத்திருந்துள்ளனர்

மட்டுப்படுத்தப்பட்ட தூதரக அதிகாரிகள் மட்டுமே சந்தித்து வந்துள்ளனர். நெருங்கிய உறவினர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோலி கிங் வழக்குடன் சேர்த்து கைலி மூர்-கில்பர்ட் கைது செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை அவரது குடும்பத்தினர் மற்றும் அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மேலும், ஈரான் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மூவரும் சரியான முறையில் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய தெஹ்ரானின் சட்டமன்ற உறுப்பினருகளுடன் தொடர்பில் இருப்பதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − four =

*