;
Athirady Tamil News

புனித நீரால் புற்றுநோய் குணமானதாக கூறும் பிரித்தானியர்: உண்மையா என சோதிக்க முடிவு செய்துள்ள மருத்துவர்கள்..!!

0

பிரான்சிலுள்ள கிறிஸ்தவ புனிதத்தலம் ஒன்றிலுள்ள புனித நீரால் தனது புற்றுநோய் குணமானதாக ஒரு பிரித்தானியர் தெரிவித்துள்ள நிலையில், அது உண்மையா என சோதிக்க மருத்துவர் குழு ஒன்று முடிவு செய்துள்ளது

கென்டைச் சேர்ந்த Kazik Stepan, முதுகுத்தண்டில் ஏற்பட்ட, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த இயலாத ஒரு வகை புற்றுநோயால் 18 வயதாக இருக்கும்போது பாதிக்கப்பட்டார்.

ஆனால் பிரான்சின் Lourdes என்னும் இடத்திலிருக்கும் புனிதத்தலம் ஒன்றிலிருக்கும் புனித நீரில் நீராடியதையடுத்து தான் குணமடைந்ததாக கூறுகிறார் Stepan

அந்த புனித நீரில் நீராடியதற்குப்பின், பல மாதங்களுக்குப்பிறகு முதன்முறையாக தன்னால் நடக்க முடிவதாகவும் கூறியிருந்தார் அவர்.

தற்போது 71 வயதாகும் Stepan, Lourdesஇலுள்ள 30 மருத்துவர்கள் அடங்கிய, சர்வதேச மருத்துவ கமிட்டி முன்பு ஆஜராகி, தான் குணமானதை நிரூபிக்க இருக்கிறார்.Stepan தொடர்பான தனது முடிவை அக்டோபர் மாதம் கமிட்டி அறிவிக்க உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − one =

*