;
Athirady Tamil News

பொலிசாரின் எச்சரிக்கையை மீறி மின்னல் வேகத்தில் சென்ற கார்.. அடுத்து நடந்த விபரீதம்..!!

0

பிரான்சின் Gers நகரில் பொலிசாரின் கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்ற கார் விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

Gers நகரில் உள்ள Pavia எனும் சிறு நகரில் பொலிசார் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கார் ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது.

உடனே பொலிசார் அந்த காரை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டை மீறி குறித்த கார் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.

சில நொடிகளுக்குள்ளாகவே அந்த கார் எதிர்பாராமல் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த மூன்று பேரில், 19 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் காரில் இருந்த 20 மற்றும் 17 வயது நபர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் Pavia-வில் இருந்து Pessan நகருக்கு செல்லும் வழியில், உள்ளூர் வீதி ஒன்றில் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக பொலிசார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 6 =

*