;
Athirady Tamil News

ஜோன்ஸ்டனின் மனு ஒத்திவைப்பு!!

0

தனக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி முன்னாள் வர்த்தகதுறை அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தாக்கல் செய்துள்ள அடிப்படை ஆட்சேபனை மனுவின் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது ச.தொ.ச நிறுவனத்தில் கடமையாற்றிய 153 ஊழியர்களை உத்தியோகப்பூர்வ பதவிகளில் இருந்து நீக்கி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்து, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் குறித்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் நீதிபதி பிரதீப் ஹெட்டிஆராய்ச்சி முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மனுவின் விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் வர்த்தகதுறை அமைச்சரான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கொழும்பு நீதவான் நீதிமன்றம் தனக்கு எதிராக வழங்கிய தீர்ப்பு சட்டவிரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ ச.தொ.ச நிறுவனத்தில் கடமையாற்றிய 153 ஊழியர்களை உத்தியோகப்பூர்வ பதவிகளில் இருந்து நீக்கி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முறையிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட விதம் சட்டவிரோதமானது எனவும் அதற்கு எதிராக தனது சட்டத்தரணிகள் அடிப்படை ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்த போதிலும் அதனை நீதிமன்றம் நிராகரித்துடன் வழக்கை தொடர்வதற்கும் முடிவு செய்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தனது மேமுறையீட்டு மனுவில் கூறியுள்ளார்.

நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை சட்டவிரோதமாக அறிவித்து அனைத்து வகையாக குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 13 =

*