;
Athirady Tamil News

பாடசாலை மாணவனை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை!!

0

காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இன்று (16) காலை 7.00 மணி அளவில் மாணவன் காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவன் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

மஹியங்கனை, மாபாகடவெவ பிரதேசத்தை சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவனே இந்த அனர்த்திற்கு முகங்கொடுத்துள்ளான்.

இந்த மாணவன் பாடசாலை சென்றுக் கொண்டிருந்த போது, வீதிக்கு திடீரென வந்த காட்டு யானை மாணவனை தும்பிக்கையால் தூக்கி வீசியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரலகங்வில, வராபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 53 வயதுடைய ருஹுனுகம, வராபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*