;
Athirady Tamil News

அம்மை நோயுடன் பேருந்தில் பயணித்த நபர்: மக்களுக்கு எச்சரிக்கை..!!

0

பவேரிய தலைநகரில் பேருந்தில் பயணித்த ஒரு பயணிக்கு தட்டம்மை என்னும் அம்மை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவருடன் பயணித்த பயணிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Mainz நகரிலிருந்து பவேரிய தலைநகரான முனிச் நகருக்கு பேருந்தில் பயணித்த ஒரு பயணிக்கு தட்டம்மை அல்லது மணல்வாரி என்னும் measles நோய் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே அன்று அவருடன் அதே பேருந்தில் பயணித்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தட்டம்மைக்கான அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தட்டம்மை என்பது எளிதில் பரவக்கூடிய ஒரு வைரஸால் ஏற்படும் தொற்றுநோயாகும். ஒருவருக்கு தட்டம்மைத் தொற்று ஏற்பட்டால், ஜலதோஷம் போன்ற அறிகுறிகளுடன், கண்கள் சிவப்பதோடு, காய்ச்சலும், தலை மற்றும் உடல் முழுவதும் செம்பழுப்பு நிற புள்ளிகளும் தோன்றும்.

எனவே இவ்வித அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக சுகாதரத்துறைக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 7 =

*