;
Athirady Tamil News

ஆசிரியர்கள் அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற கோரிக்கை!!

0

கல்வியற் கல்லூரிகளில் டிப்ளேமா கற்கை நெறியை பூர்த்தி செய்து வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஊவா மாகாண ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாகாணத்திற்கு உள்ளேயே கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் (15) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற ஆளும் தரப்பு குழு கூட்டத்தின் போதே, தான் இந்த விடயத்தை பிரஸ்தாபித்தாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் 300 க்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படும் போது ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சு அது குறித்த தகவல்களை மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கவில்லை என குற்றம் சுமத்தினார்.

அதன் காரணமாகவே இந்த குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தான் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய தற்போது குறித்த ஆசிரியர்களை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு உள்ளேயே உள்வாங்க பிரதமர், மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இணங்கியுள்ளதாக கூறினார்.

மேலும், கண்டி பொது வைத்தியசாலையில் கடந்த 2 மாதங்களாக சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றமை குறித்து சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பதுளை மாவட்டத்தில் இருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறும் சிறுநீரக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அரவிந்தகுமார் எடுத்துரைத்துள்ளார்.

வைத்தியர்களின் குறைப்பாடு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய போது, அதன் அவசியதன்மையை உணர்ந்துக் கொண்ட சுகாதார அமைச்சர் உடனடியாக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும் அவர் கூறினார்.

அதற்கமைய பொறுத்தமான வைத்தியர்களை கண்டி பொது வைத்தியசாலைக்கு நியமனம் செய்து தடைபட்டுள்ள சிறுநீரக சத்திர சிகிச்சை பிரிவை விரைவாக இயங்கச் செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனரத்ன பணிப்புரை விடுத்தாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − nine =

*