;
Athirady Tamil News

சீரற்ற வானிலை – 2 ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு!!

0

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக 2 ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய களு கங்கையின் நீர்மட்டம் மில்லகந்த பகுதியிலும், அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் துனமலே பகுதியிலும் அதிகரித்துள்ளது.

இதனால் குறித்த ஆறுகளை அண்மித்து வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றிரவு களுகங்கையின் நீர்மட்டம், இரத்தினபுரி பகுதியில் அதிகரித்து காணப்பட்டதாகவும் தற்போது அந்த நிலைமை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + twenty =

*