;
Athirady Tamil News

தோட்டப்புறங்களில் குறைக்கப்படாத பாணின் விலை!!

0

பிரிமா நிறுவனத்தால் அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும் தோட்டப்புறங்களின் பிரதான நகரங்களில் அமைந்துள்ள சில பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் பாண் மற்றும் கோதுமை மா பொருட்களின் விலைகளை இதுவரை குறைக்கவில்லை என பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த வாரம் பிரிமா நிறுவனத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தால் பேக்கரி உரிமையாளர்கள் 450 கிராம் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 3 ரூபாவாலும், ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை பல்வேறு விலைகளின் அடிப்படையில் அதிகரித்தனர்.

அதேபோல், ஹோட்டல்களிலும் கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன.

எவ்வாறாயினும், கோதுமை மாவினை விலையை குறைப்பதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ள போதும், ஹட்டனில் அமைந்துள்ள சில பேக்கரி மற்றும் ஹோட்டல்களில் விலை குறைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில், ஹட்டன் பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் ஏ.ஜே.எம்.பஷீர் தெரிவித்ததாவது, கோதுமை மாவின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதால் அது சார்ந்த உற்பத்திகளின் விலைகளை குறைத்து விற்பனை செய்யுமாறு அனைத்து பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

அதனை மீறி செயற்படும் பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அல்லது விலை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × one =

*