;
Athirady Tamil News

TNA உறுப்பினர்களின் சிபார்சில் சமுர்த்தி வேலைவாய்ப்பு!!

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சில் சமுர்த்தி வேலைவாய்ப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் சிபார்சில் சமுர்த்தி வேலைவாய்ப்பை வழங்கி அரசாங்கம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

நாடாளாவிய ரீதியில் 5 ஆயிரம் பேருக்கு அரசாங்கத்தால் கடந்த வெள்ளிக்கிழமை சமுர்த்தி நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்டவர்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 10 பேர் வீதம் தமது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெயர்களை சிபார்ச்சு செய்திருந்தனர்.

அவ்வாறு சிபார்ச்சு செய்யப்பட்டவர்களில் கோரப்பட்ட கல்வித் தகமைகளை உடையவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வழங்கிய இந்த சலுகையால் பாராளுமன்ற உறுப்பினர்களும், உறவினர்களும் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை, தேசிய சேமிப்பு வங்கியிலும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*