;
Athirady Tamil News

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்தும் முன்னெடுக்கும் – முதல்வர் !!

0

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களிலும் யாழ்ப்பாண மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் தெரிவித்தார்.

தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது.
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வருக்கு கடந்த வாரம் எழுத்திய கடிதத்தில், தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை மாநகர சபைதான் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முதல்வர் இ.ஆனல்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நல்லூரில் உள்ள நினைவு தூபியில் இடம்பெற்று வருகிறது.

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாண மாநகர சபையின் வருடாந்த நிகழ்ச்சி நிரலில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வும் உள்ளடக்கப்படும்.

அத்தோடு மிக விரைவில் தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியும் கடந்த காலங்களில் இருந்தது போல அமைக்கப்படும்”என்றும் ஊடகங்களிடம் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போதும் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி மிகவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்று யாழ்ப்பாண மாநகர முதல்வர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + twelve =

*