;
Athirady Tamil News

சீரற்ற வானிலையால் டெங்கு பரவும் அபாயம் !!

0

பெய்துவரும் அடை மழைக் காரணமாக டெங்கு பரவும் அபாயம் வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்த நிலைமை காணப்படுவதாக அந்த பிரிவு கூறியுள்ளது.

இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சுகாதார அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சின் மூலம் விசேட நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் டெங்கு நோய் ஒழிப்பு மற்றும் நாட்டு மக்களின் உயிர்களை காப்பாற்றல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

எனவே, இது குறித்து மக்களை தெளிப்படுத்துவது அத்தியாவசியமாகின்றது எனவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + thirteen =

*