;
Athirady Tamil News

போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு : ரோஹித அபே­கு­ண­வர்­தன கூறு­கிறார்!!

0

தாமரை கோபு­ரத்தின் ஊடாக எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு கிடைக்­க­வி­ருந்த கௌர­வத்தை பறித்­தது மாத்­தி­ர­மன்றி போலி­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையும் முன்­வைப்­பது நாக­ரி­க­மான அர­சியல் செயற்­பாடு அல்ல. தாமரைக் கோபுர விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு தவ­றான ஆலோ­ச­னை­களே வழங்­கப்­பட்­டுள்­ளன என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம் பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்துகொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கடந்த அர­சாங்­கத்தின் திட்ட­மி­ட­லுக்கு அமைய நிர்­மா­ணிக்­கப்­பட்ட தெற்­கா­சி­யாவின் உய­ர­மான கோபுரம் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு எவ்­வித அழைப்பும் விடுக்­கா­மல்­தி­றக்­கப்­பட்­டமை நாக­ரி­க­மான அர­சியல் செயற்­பாடு அல்ல,

கடந்த அர­சாங்­கத்தின் அபி­வி­ருத்தி திட்­டங்­களை விமர்­சித்து ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் இன்று அந்த அபி­வி­ருத்­தி­களின் பெரு­மை­யினை தம­தாக்கி கொள்­கின்­றது. மொர­ஹா­கந்த நீர்த்­தேக்கம் தொடக்கம் தற்­போது திறக்­கப்­பட்­டுள்ள தாமரை கோபுரம் வரையில் அனைத்து அபி­வி­ருத்­தி­களும் கடந்த அர­சாங்­கத்­தி­னாலே முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

நடப்பு அர­சாங்கம் சுய­மாக ஆரம்­பித்து நிறைவு பெற்ற எந்த அபி­வி­ருத்தி நிர்­மா­ணங்­களும் கிடை­யாது. கடந்த அர­சாங்­கத்­தினை விமர்­சிப்­ப­தி­லேயே கடந்த நான்­ கரை ஆண்­டுகள் வீண­டிக்­க­ப்பட்­டுள்­ளன. தாமரை கோபுர திறப்பு விழாவின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்டு உண்­மைக்கு புறம்­பா­னது.

‘ஆசி­யாவின் ஆச்­ச­ரி­ய­மிக்க நாடு’ என்ற அபி­வி­ருத்தி கொள்­கைக்கு அமை­யவே கொழும்பு நகரில் தெற்­கா­சி­யாவின் உய­ர­மான கோபுரம் நிர்­மா­ணிக்கும் பணிகள் 2012ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­திற்கு பிறகு கோபுர நிர்­மா­ணப்­ப­ணிகள் ஏதும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. நிர்மாண பணி­களை முன்­னெ­டுத்த நிறு­வ­னத்தின் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் இதன் போது முழு­மை­யாக இடை­நி­றுத்­தப்­பட்­ டன.

ஒப்­பந்தம் செய்து கொண்ட நிறு­வனம் நிர்­மா­ணப்­ப­ணி­களை இடை­நி­றுத்­தி­ய­மை­யினால்11 பில்­லியன் ரூபா அர­சாங்­கத்­திற்கு நட்­ட­ம­டைந்­துள்­ள­தாக கணக்­காளர் நாய­கத்தின் அறிக்கை ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்பில் ஜனா­தி­பதி ஏன் கடந்த நான்­கரை வருட கால­மாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­வில்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு ஒரு தரப்­பினர் தவ­றான ஆலோ­ச­னை­களை வழங்­கு­கின்­றார்­களா என்ற சந்­தேகம் தோற்றம் பெறு­கின்­றது.19ஆவது அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் போது அத்­தி­ருத்­தத்தை பெரு­மி­த­மாக கொண்­டா­டி­யவர் அதி­கார போட்­டியின் போது அத்­தி­ருத்தம் நாட்டின் சாபக்­கேடு என்று கடு­மை­யாக விமர்­சித்தார்.

தாமரை கோபுர நிர்­மா­ணிப்பில் நிதி மோசடி செய்­யப்­பட்­டுள்­ளது என்று இதுவரையில் சுயாதீன ஆணைக்குழுக்கள் ஏதும் அறிக்கைகளையோ, சந்தேகத்திற்கிடமான கேள்விகளையோ எழுப்பவில்லை. ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்கள் கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரின் மீதும் தாக்கம் செலுத்தியுள்ளது. ஆகவே இவ்விடயம் தொடர்பில் எவ்வித பாரபட்சமின்றி சுயாதீன விசாரணைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 4 =

*