;
Athirady Tamil News

ம்­பள அதி­க­ரிப்பில் அர­சாங்கம் தோல்வி – மக்கள் விடு­தலை முன்­ன­ணி!!

0

தொழி­லாளர் உரி­மைகள் குறித்து பேசி­னாலும் தோட்டத் தொழி­­லாளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பில் அர­சாங்கம் தோல்வி கண்­டுள்­ள­தாக தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் தாமரைக் கோபுர நிர்­மாணப் பணி­களில் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் நிதி மோசடிகள் தொடர்பில் கோப் குழு ஊடாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை வாசனா நிதியத் திருத்தச் சட்­ட­மூலம் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தாமரைக் கோபுர திறப்பு விழா­வின்­போது 200 கோடி ரூபாய் ஊழல் இடம்­பெற்­ற­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். 200 கோடி ரூபாய் என்­பது சிறிய தொகை அல்ல. 2500 ரூபா வீதம் 8 இலட்சம் குடும்­பங்­க­ளுக்கு சமுர்த்திக் கொடுப்­ப­னவை வழங்­கக்­கூ­டிய நிதி­யாகும். கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த தாமரைக் கோபுர நிர்­மாணப் பணி­களில் மோச­டிகள் இடம்­பெற்­றன என்­பது சாதா­ர­ண­மான விட­ய­மல்ல. அது பார­தூ­ர­மான குற்­ற­மாகும். மேலும் இது தொடர்பில் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும். இந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்­க­ளுக்கு தண்­ட­னையை வழங்க வேண்­டி­யது ஜனா­தி­ப­தியின் பொறுப்­பாகும். அதனை அவர் செய்ய வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்­திலேயே இந்த பாரிய நிதி மோசடி இடம்­பெற்­றி­ருப்­ப­தாக கூறிக்­கொண்டு அவ­ரையே பிர­த­ம­ராக்­கி­யதும் ஜனா­தி­பதி மைத்­தி­ர­ிபால சிறி­சேன செய்த பாரிய தவ­றாகும். 200 கோடி ரூபா என்­பது நாட்டு மக்­களின் வரிப்­பணம் என்­பதால் இதனை சாதா­ர­ண­மாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது.நிதியை முகா­மைப்­ப­டுத்திய நிறு­வ­ன­மாக பாரா­ளு­மன்­றமே இருக்­கி­றது. ஆகவே கோப் குழு ஊடாக இது தொடர்பில் விரை­வாக விசா­ர­ணைகள் மேற்­கொண்டு இந்த ஊழல் தொடர்பில் நாட்டு மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்த வேண்டும்.

மேலும் வாசன நிதியத் திருத்தச் சட்­டத்தின் 59 அ உறுப்­பு­ரிமை நீக்­கப்­பட்­டுள்­ளது தொடர்பில் கடந்த 30 வரு­டங்­க­ளாக முத்­த­ரப்பு பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஒப்­பந்த சேவையை இல்­லா­தொ­ழிப்­ப­தாக தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த காலங்­களில் பல தட­வைகள் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போதும் ஜனா­தி­பதி ஒப்­பந்த சேவையை இல்­லா­தொ­ழிப்­ப­தாக உறு­தி­ய­ளித்தார். வாசன நிதியத் திருத்தச் சட்­டத்தின் 59 உறுப்­பு­ரிமை நீக்­கப்­பட்­டுள்­ளது எவ்­வா­றென ஆளுங்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன கேள்வி எழுப்­பி­யி­ருந்தார். தொழி­லா­ளர்­களின் பணிகள் தொடர்பில் தீர்­மா­ன­மெ­டுக்கும் அதி­கா­ரத்தை இத்­தி­ருத்தச் சட்­டத்­தி­னூ­டாக முத­லா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த திருத்தச் சட்டத்தால் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்க முடியாது. இதனால் இதற்கு ஆதரவளிக்க முடியாது. வாசனா நிதியத் திருத்தச் சட்டமூலம் ஒப்பந்த சேவையை அல்லது மனித வளச் சேவையை நீக்காது அதனை சட்டரீதியாக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு ஆதரவளிக்க முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*