;
Athirady Tamil News

யாழ் மாவட்டச் செயலகத்தில் இலஞ்ச ஒழிப்பு தொடர்பான செயலமர்வு!! (படங்கள்)

0

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு இணைந்து ஏற்பாடு செய்த இலஞ்ச ஒழிப்பு தொடர்பான செயலமர்வு யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகளுக்கான இச் செயலமர்வில் கபே அமைப்பின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இலஞ்சத்தை ஒழிப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வுகள் என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*