;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் கையேற்றல் நாளை முதல் ஆரம்பம்!!

0

2019 ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் கட்டுப்பணம் நாளை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06 திகதி மதியம் 12.00 மணி வரை கையேற்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காலை 9 மணி முதல் 11 வரையான காலப்பகுதியில் வேட்பாளர் மனுத்தாக்கல் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − two =

*