;
Athirady Tamil News

காதலனுடன் ஹொட்டல் அறையில் தங்கிய இளம்பெண்: அவர் அனுப்பிய படத்தில் தாயின் கண்ணில் சிக்கிய காட்சி..!!

0

காதலனுடன் சுற்றுலா சென்ற மகள், தாய்க்கு தங்கள் ஹொட்டல் அறையின் படத்தை அனுப்ப, தாயின் கண்களில் ஒரு காட்சி சிக்கியுள்ளது.

தனது காதலர் Deanஉடன் சுற்றுலா சென்ற பிரித்தானியரான Caitlin (18), தாங்கள் தங்கும் அறையின் புகைப்படத்தை தனது தாய் Jeananneக்கு அனுப்பியுள்ளார்.

ஆனால் புகைப்படத்தைப் பார்த்த தாய், அந்த அறையில் ஒரே ஒரு கட்டில் மட்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு, கிண்டலாக, பாவம் Dean சோபாவில் தூங்க வேண்டியிருக்கிறதே, சரி, தரையில் தூங்காதவரை சரிதான் என செய்தி அனுப்பியுள்ளார்

இந்த செய்தியை புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவேற்றம் செய்து, பாவம் அம்மா, இன்னும் எனக்கு 12 வயது என்று நினைக்கிறார்கள் என்று எழுதியிருந்தார். அந்த ட்வீட் யாரும் எதிர்பாராத வகையில் வைரல் ஆனது.அதற்கு 40,000 லைக்குகள் கிடைத்ததோடு சுமார் 2,000 பேர் அதை ரீட்வீட் செய்டிருந்தார்கள்.

சிலர், நீங்கள் இப்போது வளர்ந்த பெண், நீங்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் உங்கள் அம்மா சொல்ல முடியாது என்று ட்வீட் செய்ய, மற்றொருவர், இதனால்தான் புகைப்படங்களையே அனுப்பக்கூடாது என்று கமெண்ட் செய்திருந்தார்

அவர்களுக்கு பதிலளித்துள்ள Caitlin, உண்மையில் தனது தாய் தன்னை கிண்டல்தான் செய்தார் என்றும், புறப்படுவதற்கு முன்பே வேடிக்கையாக தானும், அம்மாவும் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் இரண்டு கட்டில்கள் இருப்பதை உறுதி செய்துகொள் என்று வேடிக்கையாக சொல்ல, தான் வேண்டுமென்றே ஒரு கட்டில் உள்ள அறையை பார்த்து, அதை புகைப்படம் எடுத்து அம்மாவுக்கு அனுப்பியதாகவும், இந்த செய்தி வைரலானதைகண்டு அவர் ஆச்சரியமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − six =

*