;
Athirady Tamil News

ராஜித சேனாரத்ன இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்!!

0

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (19) ஆஜராக உள்ளார்.

இன்று மதியம் 1.30 மணி அளவில் அவரை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை சரியான முறையில் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவராமல் அரசாங்கத்தின் பணத்தை செலவழித்தமை தொடர்பில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

மின்சார சபைக்கு மேலதிகமாக மின்சாரத்தைக் கொள்வனவு செய்தமை மற்றும் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலான சாட்சிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொலன்னவ எண்ணெய் சேகரிப்பு நிலையத்தில் தார் விற்பனையில் இடம்பெற்ற 358 மில்லியன் மோசடி தொடர்பில் கொலன்னாவ என்னை சேகரிப்பு நிலையத்தின் அதிகாரிகள் குழு ஒன்றிற்கும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர் ஆகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சின் செயலாளர் வீ. சிவஞான சோதியையும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர் ஆகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*