;
Athirady Tamil News

நான் அழகாக இருக்கிறேன் என்னை சிறையில் அடைக்காதீர்கள்: சிக்னலில் காரை நிறுத்தாததால் பிடிபட்ட பெண்..!!

0

சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்றதற்காக ஒரு இளம்பெண்ணை பொலிசார் விரட்டிபிடிக்க, அவரோ நான் அழகான பெண், என்னை சிறையில் அடைக்காதீர்கள் என்றார்.

இந்த சம்பவம் நடைபெற்றது அமெரிக்காவிலுள்ள தென் கரோலினாவில், Lauren Elizabeth Cutshaw (34) என்ற இளம்பெண் சிக்னல் ஒன்றில் காரை நிறுத்தாமல் செல்ல, பொலிசார் அவரை ஓரங்கட்டி கைது செய்துள்ளனர்.

அப்போது அவர், அழுது கொண்டே, நான் ஒரு அழகான இளம்பெண், நான் சிறைக்கு செல்லலாமா என்று கேட்டுள்ளார்

மேலும், தான் ஒரு தரமான பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி என்றும், எப்போதும் நன்றாகவே படித்த மாணவி என்றும் கூறியுள்ளார்.

தான் ஒரு சுத்தமான, வெள்ளை மாணவி என்றும் அவர் தொடர்ந்து கூற, பொலிசார் ஒருவர் அதன் பொருள் என்ன என கேட்டுள்ளார்.

தற்கு அந்த பெண், நீங்கள் ஒரு பொலிசார், அதன் பொருள் என்னவென்று உங்களுக்கே தெரியவேண்டும், நீங்கள் எப்படிப்பட்டவர்களை சிறைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்பது உங்களுக்கே தெரியவேண்டும் என்கிறார்.

உண்மை என்னவென்றால், வாகனம் ஓட்டும்போது Lauren அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகம் மதுபானம் அருந்தியுள்ளதோடு, கஞ்சாவும் புகைத்துள்ளார்.

இப்படி போதையின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் இப்படித்தான் அழுவார்கள், ஏதாவது உளறிக்கொண்டே வருவார்கள், இதெல்லாம் சகஜம்தான் என்கிறார்கள் பொலிசார்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, வேகக்கட்டுப்பாட்டை மீறியது, கஞ்சா வைத்திருந்தது போன்ற குற்றங்களுக்காக Lauren சிறையிலடைக்கப்பட்டார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 1 =

*