;
Athirady Tamil News

ஏழு வருடங்களாக காரில் பயணிக்காத நபருக்கு பொலிசார் அனுப்பிய நோட்டீஸ்..!!

0

ஏழு வருடங்களாக காரில் பயணிக்காத ஒருவருக்கு, காரில் செல்லும்போது சாலையில் குப்பை போட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பிரித்தானியாவின் Horsham என்ற பகுதியைச் சேர்ந்த Barry King (54) தனது வீட்டிலிருந்து 300 மைல் தொலைவிலுள்ள Blackpool என்ற இடத்தில் காரில் செல்லும்போது சலையில் குப்பை போட்டதாகவும், அதற்காக அவர் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர் 80 பவுண்டுகள் அபராதம் செலுத்தவேண்டும் என்றும், 14 நாட்களுக்குள் அதை செலுத்த தவறினால், அபராத கட்டணம் 150 பவுண்டுகளாக உயர்த்தப்படும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தான் கடைசியாக Blackpoolக்கு சென்றது ஏழு வருடங்களுக்கு முன், தனது மனைவியின் 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, இப்போது அவருக்கு 46 வயதாகிறது என்கிறார் Barry.

தான் தவறிழைத்ததாக கூறப்படும் நேரத்தில் தனது குடும்பத்துடன் வெளியே உணவருந்த சென்றதாக தெரிவிக்கிறார் அவர்.

அத்துடன் மறுநாள் தான் வேலைக்கு சென்றதாகவும் அதற்கான ஆதாரங்களை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளார் Barry

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + five =

*