;
Athirady Tamil News

அமெரிக்காவை அடுத்து கனடாவில் பரவும் மர்ம நோய்: ஆபத்தான கட்டத்தில் ஒன்ராறியோ இளைஞர்..!!

0

அமெரிக்காவில் மர்ம நுரையீரல் நோய்க்கு 6 பேர் இதுவரை மரணமடைந்துள்ள நிலையில், கனடாவில் மின் சிகரெட் புகைத்து வந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என உள்ளூர் மருத்துவர்களை மிடில்செக்ஸ்-லண்டன் சுகாதார பிரிவு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ற்போது மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒன்ராறியோ இளைஞர் தினசரி மின் சிகரெட் பயன்படுத்தி வந்துள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

மட்டுமின்றி, குறித்த இளைஞர் பயன்படுத்திய மின் சிகரெட் நிறுவனம் தொடர்பிலும் தகவல்களை சேகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட முடியாது எனவும், அது குறிப்பிட்ட நிறுவனத்தின் மின் சிகரெட்டுகளை மட்டுமே குறிவைப்பதாக அமைந்துவிடும் எனவும்,இந்த விவகாரம் தொடர்பில் தீவிர ஆய்வுக்கு பின்னர் உறுதியான தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் புழக்கத்தில் இருக்கும் மின் சிகரெட்டுகளால் சிக்கல் இல்லை என பரவலாக குறிப்பிடப்படும் கருத்துகள் உண்மையல்ல எனவும், மின் சிகரெட் புகைப்பதும் சிக்க;லை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட ஒன்ராறியோ இளைஞர் மின் சிகரெட்டால் மட்டுமே பாதிப்புக்கு உள்ளானதாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் 33 மாநிலங்களில் சுமார் 450 பேர் இந்த மின் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் மர்ம நுரையீரல் நோய்க்கு இரையாகியுள்ளனர்.

6 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்தியாவில் நாடு முழுவதும் மின் சிகரெட்டுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 8 =

*