;
Athirady Tamil News

ஏற்றுமதி விருது விழா 2019 ஜனாதிபதி தலைமையில்!!

0

ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா நேற்று (19) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயின் தலைமையில் இடம்பெற்றது

ஏற்றுமதித்துறைக்கு பங்களிப்பு வழங்கியோரை பாராட்டும் நோக்கில் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழாவானது இம்முறை 23ஆவது தடவையாகவும் இடம்பெற்றது.

2018/19 வருடங்களுக்கான 13 விசேட விருதுகளும் 42 பொருட்கள் மற்றும் சேவைகள் பிரிவுகளுக்கான 42 விருதுகள் என்ற வகையில் 56 விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் 42 பிரிவுகளுக்கு உட்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தகைமையை பூர்த்தி செய்த ஏற்றுமதியாளர்களுக்கு 33 விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

விருது பெறுவதற்கு தகுதியானவர்களை 2018/19 நிதியாண்டுக்கு உட்பட்ட ஏற்றுமதியாளர்களால் ஈட்டப்பட்ட வருவாய்க்கு மேலதிகமாக சந்தை பன்முகத் தன்மை, புதிய தொழில் வாய்ப்புகள், உற்பத்தியின் போது பெறுமதி சேர்த்தல் மற்றும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏற்றுமதி வளர்ச்சி ஆகிய காரணிகள் கருத்திற்கொள்ளப்பட்டன.

1981ஆம் ஆண்டு ஏற்றுமதி சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஏற்றுமதி விருது விழா இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் உயர் விருதாக கருதப்படுவதுடன், ஏற்றுமதி துறையின் அதிக பங்களிப்பு வழங்கியவர்களுக்காக இவ்விருதுகள் வழங்கி வைக்கப்படுகின்றது.

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதியமைச்சர் நளின் பண்டார, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்திரா மல்வத்த ஆகியோர் உள்ளிட்ட விசேட அதிதிகள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − six =

*