;
Athirady Tamil News

தர்மமுழக்கம் – மாபெரும் கிறிக்கட் சுற்று போட்டி!! (படங்கள்)

0

தர்மமுழக்கம் என அழைக்கப்படும் மாபெரும் கிறிக்கட் சுற்று போட்டி இன்று ஆரம்பமாகியது.

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி மகாவித்தியாலயம் மோதிக்கொள்ளும் தர்மமுழக்கம் என அழைக்கப்படும் குறித்த கடினபந்து சுற்று போட்டி ஐந்தாவது போட்டியாக இன்று ஆரம்பமானது.

தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகிய குறித்த போட்டியில் இரு அணிகளும் பல பரீட்சையில் ஈடுபட்டன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தர்மபுரம் மத்தியகல்லூரி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த ஐந்து வருடத்திற்கு முன்னர் செல்வி ஜீவராஜா விதுசா என்ற மாணவியின் தனியாள் செயற்திட்டத்திற்காக குறித்த மாணவியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் தர்ம முழக்கம் துடுப்பாட்டப்போட்டி ஐந்தாவது முறையாக இன்றும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆரம்ப நிகழ்வில் இரண்டு பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் தர்மபுரம் கல்லாறு வட்டார பிரதேச சபை உறுப்பினர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இவ் துடுப்பாட்டப்போட்டி நாளையும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + 3 =

*