;
Athirady Tamil News

மஹிந்த அணிக்கு சாதகமாக அமைந்தால் இராணுவ ஆட்சி – சிவமோகன்!!

0

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள போட்டி மஹிந்த அணிக்கு சாதகமாக அமைந்தால் இராணுவ ஆட்சி ஏற்படும்: சிவமோகன் எம்.பி

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள போட்டி மஹிந்த அணிக்கு சாதாகமாக அமைந்தால் எதிர்காலத்தில் இராணுவ ஆட்சி ஏற்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு பிரிவுகளாக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைமையை நோக்கி முக்கிய அமைச்சர்களும், அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் கீழ்மட்ட தலைவர்களும், கிராம மட்ட தலைவர்களும் ஒன்றிணைந்து இருப்பதை உணரமுடிகிறது. இவர்களுடைய போட்டி இறுதியில் மஹிந்த ராஜபக்ஸ அணியினருக்கு சாதகமாக அமையுமாகவிருந்தால் சில வருடங்களில் இராணுவ ஆட்சி ஒன்று இந்த நாட்டில் ஏற்படுத்துவதற்குரிய நிலைமையை உருவாக்கி வைத்தவர்களாக அவர்கள் இருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × five =

*