;
Athirady Tamil News

வடமாகாணத்தில் 1708 பேர்கள் வீதி விபத்து ஊடாக பாதிக்கப்பட்டுள்ளனர்!!

0

வடமாகாணத்தில் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தகவல் திரட்டல் ஊடாக 1708 பேர்கள் வீதி விபத்து ஊடாக பாதிக்கப்பட்டுள்ளனர்..என யாழ் போதனா வைத்தியசாலை வீதி விபத்துப்பிரிவின் வைத்தியர் கலாநிதி ஏ.கோபிசங்கர் தெரிவித்தார்..

வடமாகாணத்தின் இவ் செயற்றிட்டத்தினை மக்கள் மத்தியில் இருந்து விழிப்புணர்வு செய்துகொள்ளும் வகையில் வடமாகாண ஆளுநர் செயலகம்.வடமாகாண வீதிப்போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றின் எற்பாட்டில் ஒன்றினைந்த எதிர்வரும் 07.10 தொடக்கம் 17.10 ஆகிய திகதி வரை எங்கள் வீதி,எங்கள் பொறுப்புணர்வு,எங்கள் பாதுகாப்பு என்ற தொனிப்பொருளில் இவ் விழிப்புணர்வு செய்யும் நடமாடும் நடைபயணம் மேற்கொள்ளப்படயிருக்கின்றன.

இவை எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு மாவட்டங்கள் ஊடாக பிரதேச செயகரீதியாக நடாத்துவதற்கு திட்டமிட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடமாகாண வீதிப்போக்குவரத்து தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு உட்டும் செய்யறிட்டங்கள் பற்றி ஊடகவியாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் ஊடகசந்திப்பு இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்தில் யாழ் போதனா வைத்தியசாலை வீதி விபத்துப்பிரிவின் வைத்தியர் கலாநிதி கோபிசங்கர் தலைமையில் நடைபெற்றது..

இதன் போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்

வடமாகாணத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி,உட்பட அருகில் உள்ளநபர்கள் அனெகமான பல இடங்களில் தலைக்கவசம் அணியாது செல்லகூடியநிலையில் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது..

அதுவும் அவர்களின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த நிலையில் இருக்கலாம்.. அப்படியானவர்களுக்கு குறைந்த விலைக்கவசத்தில் தலைக்கவசம் வழங்கல் மேற்கொள்ளப்பட யிருக்கின்றது.மேலும் உடைக்காப்பூறுதிகள்,கையூரைகள் என்பன வழங்கயிருக்கின்றோம்

இதனை அடுத்து இவ் வார இறுதியில் விசேட இணைத்தளத்தினை செய்யஇருக்கின்றோம். அவ் இணையத்தளத்தில் என்ன உரிமைகள் இருக்கின்றன.எவ்வாறு செல்லவேண்டும் அதன் அறிவூருத்தல்கள் போன்ற விடையங்கள் உள்ளடக்கப்படயிருக்கின்றன

இதனால் மக்கள் முறைப்பாட்டுக்கான பொறிமுறைகளும் அங்குயிருக்கின்றன.மக்கள் இணங்காணுகின்ற பிரச்சனைகள் என்பன ஆதரமுள்ள முறைப்பாடுகளும் காணப்படுகின்றது..அவ்வாறான விடையங்கள் தொடர்பாக சட்டநடவடிக்கையும் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தின் வீதிப்போக்குவரத்து விபத்துக்கள் ஆராய்ச்சி பொறிமுறையிலான பகுதியினை அமைக்கயுள்ளளோம். இதன் ஆரம்பகட்டமாக எல்லா மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த யிருக்கின்றோம்.

கடந்த 05 மாதங்களாக தகவல் திரட்டல் இருந்தன அதில் யாழ் மாவட்ட விபத்து சம்பந்தமான கோவை இணங்காணப்பட்டுள்ளது.அவற்றினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் மிகதுரித கண்காணிப்பில் இவ் செயற்றிட்டங்கள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − one =

*