;
Athirady Tamil News

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் விடுதி திறந்து வைப்பு!! (படங்கள்)

0

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தங்கும் விடுதி திறந்து வைப்பு

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் ‘அருகில் உள்ள பாடசாலையை சிறந்த பாடசாலையாக ஆக்குதல்’ என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆசிரியர் தங்கும் விடுதியினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (20.09) பாடசாலையின் அதிபர் ஆர்.வீரசிங்கம் தலமையில் இடம்பெற்றது.

இக் கட்டிடத்தின் நினைவு கல்வெட்டினையும், விடுதியையும் வர்த்தக கைத்தொழில் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சி அமைச்சர் றிசாட் பதியுதீன் திறந்து வைத்தார்.

இந் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதகிருஷ்ணன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான ஜெயதிலக்க, முன்னாள் வடமாகாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் இணைப்பாளருமான ரிப்கான் பதியுதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான லரீப், மஞ்சுளா, அமைச்சரின் ஆதரவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*