;
Athirady Tamil News

படையினர் வசமுள்ள காணி விடயம் தொடர்பில் கலந்துரையாடல்!! (படங்கள்)

0

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதி மற்றும் கேப்பாபிளவு படையினர் வசமுள்ள மக்களின் காணி விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது

வடமாகாண ஆளுநர் தலைமையில் குறித்த கலந்துரையாடல் 12.00 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியது. நா.ம.உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராசா, முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், படை அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர், பிரதம செயலாளர், கேப்பாபிளவு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

இதன் போது கேப்பாபிளவு மக்களுக்கு குறித்த காணிக்கு பதிலாக இரட்டிப்பான அரச காணி வழங்குவது எனவும் அல்லது குறித்த படைதலைமையகம் அமைந்துள்ள பகுதிக்கு மக்களை அழைத்து சென்று அடையாளப் படுத்தி அதன் பின்னர் விடுவிக்கக் கூடிய சூழலில் உள்ள காணியை படைத்தரப்பிடம் இருந்து பெறுவது என இரண்டு தீர்மானம் ஆளுனரால் எடுக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 10 =

*