;
Athirady Tamil News

‘திலீபன் வழியில் நாங்கள்’ ஊர்வலத்திற்கு பொலிசார் இடையூறு!! (படங்கள்)

0

திலீபன் வழியில் நாங்கள் வருகின்றோம் ஊர்வலத்திற்கு பொலிசார் இடையூறு

வவுனியா, நகரசபை பொங்கு தமிழ் நினைவுத்தூபியடியில் இன்று காலை ஆரம்பித்த திலீபன் வழியில் நாங்கள் வருகின்றோம் என்ற நடைபயணத்திற்கு வவுனியா பொலிசார் இடையூறை ஏற்படுத்தினர்.

திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணியில் ஏற்பாட்டில் 8 அம்சக் கோரிக்களை முன்வைத்து திலீபன் வழியில் நாங்கள் வருகின்றோம் என்ற தொனிப் பொருளில் நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, நகரசபை பொங்குதமிழ் தூபி முன்பாக ஆரம்பித்த இந்த நடை பயணமானது நான்கு நாட்களாக இடம்பெற்று யாழின் திலீபன் நினைவு இடத்தில் நிறைவு பெற இருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடியாக பதில் கூறு, அரசியல் கைதிகளை விடுதலை செய், பௌத்தமயமாக்கலை உடன் நிறுத்து, இலங்கை அரசின் போர்க்குற்றதை சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்றில் விசாரணை செய், ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிராகரி உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணமும், திலீபனின் படம் தாங்கிய ஊர்தியும் செல்கின்றது.

இவ் நடைபவனி வவுனியா, மணிக்கூட்டு கோபுர சந்தியை கடந்த போது அங்கு வந்த வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் நடைபவனியை மறித்தனர். இதன்போது அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒலிபெருக்கியை ஒலிக்காது அமைதியாக செல்லுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து நடைபவனி ஒலி எழுப்பாது அமைதியான முறையில் மக்கள் வாழும் பகுதிக்குள் நகர்ந்து சென்றது. ஏ9 வீதி புதிய பேரூந்து நிலையத்தை கடந்த பின் ஒலி எழுப்பியவாறு நடைபவனி சென்றது.

இவ் நடைபவனியில் தமிழ் தேசிய மக்களி முன்னனியின் செயலாளர் செ.கஜேந்திரன், கட்சியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ், கட்சியின் ஊள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், இளைஞர் அணியினர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + thirteen =

*