;
Athirady Tamil News

பிரபல விற்பனை நிலையங்களில் கொள்ளை – 4 பேர் சிக்கினர்!!

0

பிரபல விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்வதாக கூறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பlட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்யும் போது அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் சிலவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

27 முதல் 30 வயதுகளுக்கு இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஹரமக, பிலியந்தலை, கொஹுவல, தலங்கம, மிரிஹான, மொரடுமுல்ல மற்றும் கொட்டாவை பிரதேசங்களில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்களில் இவ்வாறு கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இன்றைய தினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 19 =

*