;
Athirady Tamil News

தீப்பற்றும் அபாயத்திலிருந்த விமானம்: விரைந்து செயல்பட்ட பெண்ணால் காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்..!!

0

ஜெனீவா புறப்பட இருந்த ஒரு விமானத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருக்கும்போது சிகரெட் ஒன்றை பற்றவைத்த ஒரு பயணியை விரைந்து பிடித்த பெண் ஊழியர் ஒருவரால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டிருந்தது.Luton விமான நிலையத்திலிருந்து ஜெனீவா புறப்பட இருந்த ஒரு விமானத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது விமான நிலையத்திலிருந்து விமானத்தில் ஏறுவதற்காக வந்துகொண்டிருந்த ஒரு பயணி, முட்டாள்தனமான ஒரு செயலை செய்தார்.

விமானத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த அந்த நேரத்தில், சிகரெட் ஒன்றை அவர் பற்றவைக்க, விமானத்திற்குள் ஏற்கனவே ஏறி இருந்த பயணிகள் பதறினார்கள். அதிர்ஷ்டவசமாக விமான நிலைய பெண் ஊழியர் ஒருவர் அந்த 40 வயது நபரை நோக்கி ஓடி, அவரது கையிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கி கீழே போட்டு அணைத்தார்

இத்தனை விடயங்களையும் பார்த்துக்கொண்டிருந்த அந்த விமானத்தின் விமானி, விமானத்தை விட்டு கீழே இறங்கிவந்து, அந்த பயணி விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார் என்று அறிவித்தார்.

அதே நேரத்தில் அவர் தனது குடும்பத்துடன் ஜெனீவா செல்ல இருந்ததால், அவரது குடும்பத்தார் விமானத்தில் பயணிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் அந்த பயணியை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர்.

விமானத்திலிருந்த Sara Beecroft (43) என்பவர், இப்படி ஒரு பயணி முட்டாள்தனமாக செயல்படுவார் என்பதை நம்பமுடியவில்லை என்றார்.

அவர் எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதை எண்ணிப்பார்க்கமுடியவில்லை என்று கூறிய Sara, விமானத்திலிருந்த அத்தனை பயணிகளின் உயிரையும் அவர் அபாயத்திற்குள்ளாக்கிவிட்டார் என்கிறார்.

விமானத்திலிருந்த பயணிகளில் பலர் பதறி சத்தமிடத் தொடங்கி விட்டதாக தெரிவித்த Sara, எங்களால் அவர் செய்ததை நம்பவே முடியவில்லை என்கிறார்.விரைந்து செயல்பட்டு தங்களை காப்பாற்றிய அந்த பெண் ஊழியரை பலரும் பாராட்டியுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*