;
Athirady Tamil News

ஒரு துண்டு எலுமிச்சம் பழத்திற்கு 50 சென்டு வசூலித்த உணவகம்: ஒரு வைரல் புகைப்படம்..!!

0

வைரல் புகைப்படம் ஒன்று, பாரீஸ் உலகத்திலேயே அதிக விலைவாசியுள்ள நகரங்களில் ஒன்று என்பதை நிரூபித்துள்ளது.

பிரபல ஊடகவியலாளர் ஒருவர் பாரீஸிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்தபோது, குடிக்க தண்ணீர் வாங்கியிருக்கிறார்.

அப்போது வழங்கப்பட்ட தண்ணீருக்கு 6 யூரோக்கள் வசூலிக்கப்பட்டுள்ளது.

தண்ணீருக்கான பில்லை பார்த்தபோது, அதில் தண்ணீருக்கு 5.50 யூரோக்களும், அந்த தண்ணீரில் போடப்பட்டிருந்த எலுமிச்சம் பழ துண்டுகளுக்கு 50 சென்ட்களும் கட்டணம் போடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் Nora Hamadi என்னும் அந்த ஊடகவியலாளர்

Nora அந்த பில்லை சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட, அதற்கு 3,000 ஷேர்களும் 8,000 லைக்குகளும் கிடைத்தன.

அவை ஒன்றும் ஆர்வத்தாலோ மகிழ்ச்சியாலோ கொடுக்கப்பட்ட லைக்குகள் அல்ல! மக்களின் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தும் வண்ணம் கொடுக்கப்பட்டவை அவை.

ஆம், பலரும் பாரீஸின் உயர்ந்து வரும் விலைவாசி குறித்து கவலை தெரிவித்துவரும் நிலையில், ’பகல் கொள்ளை’ என்ற வார்த்தைகளுடன் வெளியான அந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

அந்த பில்லை கவனமாக பார்த்தால், அதில் டாய்லெட்டை பயன்படுத்துவதற்கு 1 யூரோ கட்டணம் என்றும் போடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.

அந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள மற்றொரு பயனர், இனி அவர்கள் காற்றுக்கும் கட்டணம் கேட்பார்கள் போலிருக்கிறது என்று ட்வீட் செய்துள்ளார்.

பலரையும் யோசிக்க வைத்துள்ள அந்த புகைப்படத்தை சீரியஸாக எடுத்துக்கொண்ட பலர், அடுத்து எதற்கு கட்டணம் வாங்கப்போகிறார்கள், ஐஸ் கட்டிகளுக்கா அல்லது டிஷ்யூ காகிதத்திற்கா? என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்கிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + ten =

*