;
Athirady Tamil News

ஹவுடி- மோடி நிகழ்ச்சி: புதிய இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் – பிரதமர் மோடி பேச்சு..!!

0

பிரதமர் மோடி, அதிபர் டொனால்டு டிரம்ப் இருவரும் கலந்து கொண்ட ஹவுடி-மோடி நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “ உலக அரசியலை, நிர்ணயிக்கும், நபராக, டிரம்ப் விளங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் வலிமை மிக்கதாக மாற்றியவர் டிரம்ப். இரு நாடுகளின் வளர்ச்சி உச்சத்தை தொட்டு இருக்கிறது. வெள்ளை மாளிகை உடனான இந்தியாவின் உண்மையான நட்புறவு புது உச்சத்தில் இருக்கிறது” என்று கூறினார்.

அவரைத்தொடர்ந்து அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், “அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா. மோடியுடன் இருப்பது பெருமையாக உணர்கிறேன். என் அருமை இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி. மோடி மிகச்சிறந்த செயல்களை செய்து வருகிறார். இந்தியாவின் ஒவ்வொரு முயற்சிக்கும் அமெரிக்கா துணை நிற்கும். பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்திய மக்கள் கடுமையான உழைப்பாளிகள். இந்திய சமுதாய மக்களுக்காக எங்களது அரசு உழைக்கிறது. ஜனநாயகத்தின் மீது இரு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. டிரம்பை தவிர வேறு சிறந்த நபரை இந்தியா பெற்றிருக்காது” என்று கூறினார்.

மேலும் அவர், “30 கோடி மக்களை இந்திய அரசு வறுமையில் இருந்து மீட்டுள்ளது. மோடி தலைமையின் கீழ் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. அமெரிக்காவில் இந்திய உருக்கு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இந்திய மருத்துவர்கள் மருத்துவதுறையில் பெரும் பங்காற்றி உள்ளனர். உலக அரங்கில் திறமைசாலிகள் இந்தியர்கள். உலக புகழ்பெற்ற என்.பி.ஏ போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படும். மும்பையில் நடைபெறும் விளையாட்டு போட்டியை நான் காண வர வாய்ப்புள்ளது. விண்வெளித்துறையில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். வரும் நவம்பர் மாதம் இரு நாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட உள்ளன. தீவிரவாததுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவின் எல்லைபிரச்சனை குறித்து அமெரிக்கா உணர்ந்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் எல்லை பிரச்சனை உள்ளன. மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

பின்னர் டிரம்பின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசுகையில், “முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய-அமெரிக்க நட்புறவு வளர்ந்துள்ளது. அனைவருக்காகவும், அனைவருடன் என்பதே அரசின் தாரக மந்திரம். அனைவருக்காக வளர்ச்சி என்பதே எங்களின் இலக்கு. நான் ஒரு சன்னியாசி, சமானியன். உலக அளவில் ஏற்கனவே பிரபலமானவர் டிரம்ப். இது இந்திய மக்களுக்கு வழங்கப்பட்ட கவுரவம்.

மோடி நலமா என்று கேட்கிறீர்கள். ஆனால் இந்தியர் அனைவரும் நலம். “எல்லோரும் சவுக்கியம்” ( தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள்). இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்துள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தாரக மந்திரம். புதிய இந்தியாவை படைக்க இரவு, பகலாக முயற்சி செய்து வருகிறோம். நாங்களும் மாறுகிறோம் , மாற்றுவதற்கு முயற்சியும் செய்கிறோம். இந்திய தேர்தல் ஜனநாயக திருவிழா. இந்தியாவில் அதிக அளவில் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்தியாவில் 99 சதவீத கிராமங்கள் தூய்மையடைந்துள்ளன. 95 சதவீத வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமபுற சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டியுள்ளோம். தற்போது இந்தியாவில் ஒரு வாரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கிறது.

குடிமக்களை சக்திமிக்கவர்களாக மாற்றி வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் 100 சதவீதமக்கள் வங்கி கணக்கை துவங்கி உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இணைய சேவையை விரிவு படுத்தி உள்ளன. 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிய நிறுவனத்தை துவங்கி விடலாம். வருமான வரி செலுத்துவதை ஆன்லைன் மூலம் கொண்டு வந்துள்ளோம். 50 லட்சத்துக்கும் மேலானோர் ஆன்லைனில் வரி செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் போலி நிறுவனங்கள் களையெடுக்கப்பட்டுள்ளன. ஊழலை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

இந்தியாவுக்கு மிகவும் சவால் அளித்த காஷ்மீருக்கான 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே சட்டம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒரு டஜனுக்கும் மேலான பழைய சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு மறுக்கப்பட்ட நீதி நாடாளுமன்றம் மூலம் கிடைத்துள்ளது.

சிலநாடுகள் தீவிரவாதத்தை பாதுகாக்கின்றன. தீவிரவாததிற்கு ஆதரவான நாடுகளுக்கு எதிராக போராட வேண்டிய நேரம் இது. தங்கள் நாட்டை பற்றி கவலை படாதவர்கள் காஷ்மீர் குறித்து பேசுகிறார்கள். தீவிரவாததிற்கு எதிராக போராடும் டிரம்ப் பாராட்டுக்குறியவர்.

குறைவான பணவீக்கம்-வேகமான வளர்ச்சி என்ற இலக்கை எட்டியுள்ளோம். மக்களும், முதலீட்டாளர்களும் எளிதில் அணுகும் அரசாக எங்கள் அரசு உள்ளது. கார்ப்பரேட் வரி குறைத்துள்ளதன் மூலம் அந்நிய முதலீடு இருமடங்கு அதிகரிக்கும். உள்கட்டமைப்பு வசதிக்காக 1.3 டிரில்லியன் செலவளித்து வருகிறோம். அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். என்று பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + seventeen =

*