பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவு..!!

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு வடகிழக்கே 173 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு இன்று மாலை 3.45 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 5.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகள் மற்றும் வணிகவளாகங்களை விட்டுவெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெண்கள் , குழந்தைகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்.