;
Athirady Tamil News

32 கோரிக்­கை­களை ஏற்­ப­வ­ருக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் ஆத­ரவு ; இ.தொ.கா.!!

0

நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறை ­மையை ஒழிப்­ப­தற்கு ஒரு போதும் ஆதர­வ­ளிக் கப் போவ­தில்லை எனத் தெரி­வித்த இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ்,மலையக மக்கள் குறித்து முன்­வைக்­கப்­பட்­டுள்ள 32 கோரிக்­கை­க­ளுக்கு இணக்கம் தெரி­விக்கும் கட்­சிக்கே ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆத­ரவு வழங்­கப்­படும் என்றும் குறிப்­பிட்­டது.

கொழும்பு – 7 இல் உள்ள இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைமை அலு­வ­ல­க­மான சௌமி­ய­ப­வனில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட அந்த கட்­சியின் உப தலைவர் செந்தில் தொண்­டமான் மற்றும் முன்னாள் மத்­திய மாகாண அமைச்சர் மரு­த­பாண்டி ரமேஷ்­வரன் ஆகி­யோரே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர்.

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் தீர்­மானம் எடுத்­து­விட்­ட­தா­கவும், அர­சியல் கட்­சி­க­ளுடன் இர­க­சிய பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும் சமூக வலைத்­த­ளங்கள் மற்றும் இணைய தளங்­களில் வெளி­யா­கி­யுள்ள செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­னவை என்றும் இதன் போது மரு­த­பாண்டி ரமேஷ்­வரன் சுட்­டிக்­காட்­டினார்.

இவை குறித்து அவர் தொடர்ந்தும் தெளி­வு­ப­டுத்­து­கையில்,

ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த கட்­சிக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்பில் இ.தொ.கா. இது வரையில் எந்தத் தீர்­மா­னத்­தையும் எடுக்­க­வில்லை. எனினும் இது வரையில் பல அர­சியல் கட்­சிகள் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருக்­கின்­றன. எந்­தெந்த கட்­சிகள் எம்­முடன் பேச்­சு­வார்த்தை நடத்­தின என்­பது குறித்தும் எமது இறு­தித்த தீர்­மா­னத்தை அறி­விக்கும் போது தெரி­யப்­ப­டுத்­துவோம்.

எம்மால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள 32 கோரிக்­கை­களை ஏற்றுக் கொள்­வ­தோடு, அவற்றை நிறை­வேற்றக் கூடி­யவர் யார் என்­பது குறித்து ஆராய்ந்து தீர்க்­க­மான முடி­வினை எடுப்போம். எதிர்­வரும் ஓரிரு தினங்­களில் கட்­சியின் தேசிய சபை கூடி இது குறித்து ஆராயும். எமது இறுதி முடி­வினை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஊட­கங்­க­ளுக்­கூ­டாக பகி­ரங்­க­மாக அறி­விப்போம் .

அத்­தோடு தற்­போது நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு குறித்து பர­வ­லாகப் பேசப்­ப­டு­கி­றது. அதி­காரம் எதுவும் இல்­லாத ஜனா­தி­ப­தியால் மக்­க­ளுக்கு சேவை செய்ய முடி­யாது. அத்­தோடு மக்கள் பிர­தி­நி­திகள் என்ற வகையில் எம்மால் முன்­வைக்­கப்­படும் கோரிக்­கை­களை அதி­கா­ர­மற்ற ஜனா­தி­ப­தியால் நிறை­வேற்­றவும் முடி­யாது. எனவே இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் ஒரு­போதும் நிறை­வேற்­ற­தி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்­பிற்கு ஆத­ர­வ­ளிக்­காது என்றார்.

இது குறித்து செந்தில் தொண்­டமான் தெரி­விக்­கையில்,

எம்மால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களை அனைத்து கட்சிகளும் தற்போது ஏற்றுக் கொள்ளும். காரணம் இது தேர்தல் காலமாகும். இவ்வாறு எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகக் கூறுபவர்களில் யார் அவற்றை நிறைவேற்றுவார்கள் என்று ஆராய்ந்த பின்னரே அவருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது பற்றி தீர்மானிப்போம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − eleven =

*