;
Athirady Tamil News

பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 10 இலட்சம் ரூபா!!

0

தென்மாகாணத்தில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் 10 இலட்சம் ரூபா வீதம் வழங்குமாறு தென்மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர, தென் மாகாண பிரதான செயலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அதற்கமைய குறிப்பிட்ட நிதி எதிர்வரும் நாட்களில் அந்தந்த பிரதேச செயலாளர்களுக்கு கிடைக்கும் எனவும், அதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கன மழையால் காலி மாவட்டத்தின் கடவத் சதர, இமதுவ, எல்பிடிய, அக்மீமன, யக்கலமுல்ல, நாகொட, பொபே-போத்தல, பத்தேகம, ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் சோமார்த்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

அந்த மாவட்டத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பே; காயமடைந்துள்ளனர். அதேபோல் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.

காலி மாவட்டத்தில் 11 பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த 2443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் மாத்தறை மாவட்டத்தில் கிரிந்த புஹூல்வெல்ல, திக்வெல்ல, திஹகொட, வௌலிபிடிய, தேவிநுவர, வெலிகம, ஹக்மன, மாத்தறை, அத்துரலிய, கம்புறுபிட்டிய, மாலிம்பட, பிடபெத்தர, பஸ்கொட, கொடபொல, அக்குரெஸ்ஸ, முலட்டியன ஆகிய பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பிரதேச செயலாளர் பிரதீப் ரத்நாயக்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 18 =

*