;
Athirady Tamil News

கூட்டுறவு வியாபாரத்தை மேம்படுத்துவதே தனது கொள்கை !!

0

கூட்டுறவு வியாபாரத்திற்கு அரச அனுசரனையை வழங்கி அந்த துறையை மேம்படுத்துவது தனது கொள்கை என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெறும் தேசிய கூட்டுறவு மகா சம்மேளன கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

கொள்கையளவில் கூட்டுறவு வியாபாரத்தை ஊக்குவிப்பதாகவும், விசேடமாக கிராமம் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கை தரத்தை கூட்டுறவு வியாபாரத்தின் ஊடாகவே வலுப்படுத்த முடியும் என அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கூட்டுறவு வியாபாரத்துறையில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், கூட்டுறவு நிதியத்தின் நிதி அதற்காக பயன்படாமல் வேறு துறைகளுக்கு பயன்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

ஆகவே எதிர்காலத்தில் கூட்டுறவு துறையை மேம்படுத்த குறித்த நிதியத்தின் நிதியை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*