;
Athirady Tamil News

வவுனியாவில் புத்தரை குடியேற்றிய முச்சக்கர வண்டி சாரதிகள்!! (படங்கள்)

0

மத நல்லிணக்கம் என்னும் பெயரில் வவுனியாவில் புத்தரை குடியேற்றிய முச்சக்கர வண்டி சாரதிகள்

மத நல்லிணக்கம் என்னும் பெயரில் வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக புதிதாக புத்தர் சிலை ஒன்றினை முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று வைப்பு செய்துள்ளமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக சிறிய கட்டடம் ஒன்று அமைத்து அதில் பிள்ளையார், புத்தர் ஆகிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன், மாதா சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் தமது வழிபாட்டுக்காக குறித்த வழிபாட்டு தலத்தை மத நல்லிணக்கம் என்னும் பெயரில் அமைத்துள்ளனர். இருப்பினும் குறித்த புகையிரத நிலைய முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் புத்தரை வழிபடும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த எவரும் இல்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் வாழும் அப்பகுதியில் புத்தரின் சிலை வைக்கப்பட்டுள்ளமை எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளை உருவாக்கும் என அதிருப்தி வெளியிட்டுள்ள அப்பகுதி மக்கள் குறித்த செயற்பாட்டுக்கு வவுனியா நகரசபையும் அனுமதி வழங்கி துணை போகின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த பகுதிக்கு வருகை தரும் பயணிகளின் வழிபாட்டுக்காகவும், தமது வழிபாட்டுக்காகவும் புத்தர் உள்ளிட்ட சிலைகள் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத் தலைவரிடம் கேட்ட் போது, குறித்த நிகழ்வு நடைபெற்றுள்ளதாக நானும் அறிந்தேன். இது குறித்த பகுதில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிட சாரதிகளால் அமைக்கப்பட்டது. இதற்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்திற்கும் தொடர்பில்லை எனத் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனத்தெரிவித்தார்.

இது தொடர்பில் வவுனியா நகரசபைத் செயலாளர் இ.தயாபரன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவர் பதில் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − thirteen =

*