போட்டிக்கு நடுவே பரபரப்பு.. பதறி அடித்து ஓடிய ரசிகர்கள்.. இலங்கை – பாக் போட்டியில் என்ன நடந்தது? (படங்கள்)
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் நேற்று மோதிய ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் விளக்குகள் அணைந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ஒரு பால் கூட போடப்படாமல் ரத்தானது. பாகிஸ்தானில் இந்த கிரிக்கெட் தொடர்ந்து நடந்து வருகிறது. பெரும் பாதுகாப்பிற்கு இடையில் பாகிஸ்தானுக்கு இலங்கை வீரர்கள் சென்று இருக்கிறார்கள்.
இரண்டாவது போட்டி இதில் முதல் போட்டி ரத்தான நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே மிகவும் அதிரடியாக ஆடியது.முதலில் விளையாடிய பாகிஸ்தான் 50 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் எடுத்தது. எப்படி எப்படி இந்த நிலையில் அதன்பின் களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்தே திணறியது. வரிசையாக அந்த அணி வீரர்கள் விக்கெட்டை இழந்து திணறினார்கள். இதனால் 46.5 ஓவரில் அந்த அணி வெறும் 238 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியை தழுவியது.
போட்டியில் என்ன இந்த நிலையில் இந்த போட்டியின் போது இலங்கை வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போதே மைதானத்தில் இருந்த விளக்குகள் எல்லாம் அணைந்தது. ஒரே ஒரு டவர் லைட்டை தவிர மற்ற எல்லா லைட்டும் அணைந்தது. பெரிய மின்னணு பிரச்சனை ஏற்பட்டதால் இப்படி ஆனது. தடை தடை இதனால் போட்டி சில நிமிடம் தடை பட்டது. பல ரசிகர்கள் இதனால் மைதானத்தை விட்டு வெளியே செல்லும் நிலை உருவானது. சில ரசிகர்கள் ஏதாவது அசம்பாவிதம் நடக்க போகிறதோ என்று பயந்தனர். இதனால் அவர்கள் வேகமாக மைதானத்தை விட்டு வெளியே ஓடினர்.
எத்தனை நிமிடம் வீரர்களும் இதனால் மைதானத்தில் சோகமாக லைட் வரும் வரை அச்சத்துடன் அமர்ந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. பின் 10 நிமிடம் கழித்து பிரச்சனை சரி செய்யப்பட்டு போட்டி துவங்கியது..